ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு...இவைகள் தான் முக்கிய காரணம்? மனம் திறந்த மருத்துவர்கள்!

By manimegalai aFirst Published Jan 17, 2022, 9:08 AM IST
Highlights

இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.
 

இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவர், ஒவ்வொருவரின் உடல் கூறுகளும் வேறுபடும், அதே போல அனைவருக்கும் மாதவிடாய் என்பது ஒரே மாதிரியான காலகட்டத்தில் ஒரே சுழற்சியில் ஏற்படாது. எனவே, தோராயமாக ஒரு பெண்ணின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது.

அப்படியான, வழக்கமான மாதவிடாயின் சுழற்சியின்போது, ஒரு பெண்ணின் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சுத்தம் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியமாகி புத்துயிர் பெறுகிறது. எனவே, ஒரு பெண் தாய்மை அடைவதற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி மருத்துவர்கள் தெரிவித்துள்ள காரணங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எத்தனை நாட்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து அடுத்த மாதவிடாய் சுழற்சி தாமதமாக ஏற்படலாம். ஒரு சிலருக்கு இரண்டு நாட்கள் வரை இரத்தப் போக்கு இருக்கும். ஒரு சிலருக்கு 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதைப்போல் அது மாதவிடாய் சுழற்சி காலமும் வேறுபடலாம்.

நீங்கள் IUD எனப்படும் கருத்தடை சாதனத்தை பொறுத்தியிருந்தால் உங்களுக்கு மாதவிடாய் சீராக இருக்காது.

கருத்தரிக்காமல் இருப்பதற்காக மாத்திரைகளை அல்லது மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் மாதவிடாய் தாமதம் ஆகலாம்.

உங்களுக்கு ஒவ்வொரு முறை மாதவிடாய் ஏற்படும் போதும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தப்போக்கு ஏற்பட்டால், மாதவிடாய் சுழற்சியின் காலம் மாறுபடும்.

PCOS எனப்படும் கருப்பைக்குள் இருக்கும் நீர்க்கட்டிகள் காரணத்தால் மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கும்.

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் போது கார்டிசால் என்ற ஹார்மோன் சுரக்கும். இது உடலுக்கு தேவையான மற்ற ஹார்மோன்களை கட்டுப்படுத்தி உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். சம்மந்தப்பட்ட ஹார்மோன்களையும் இது பாதிப்பதும் மாதவிடாய் சுழற்சி தாமதமாக்கும்.

கார்டிசால் ஹார்மோன் போலவே தைராய்டு பாதிப்பு இருந்தாலும், அது ஒட்டுமொத்த உடலின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இதில் மாதவிடாய் சுழற்சியும் அடங்கும். தைராய்டு பாதிப்பு மாதவிடாயை மிகவும் தீவிரமாக பாதிக்கும்.

 எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கர்ப்பப்பைக்குள் இருக்கும் மெல்லிய லைனிங் தடிமன் ஆவது மாதவிடாயை பாதிக்கும்.

மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது அல்லது மாதவிடாய் ஏற்படுவது தள்ளிப் போவது ஒரு சில சூழல்களில், வாழ்க்கைமுறையால் ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவைதான்.

ஆனால், ஒரு சில நேரங்களில் உடல்நல குறைபாடுகளால் ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்பதை சரியாக கண்டறிந்து நீங்கள் மருத்துவரிடம் அதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

click me!