
முந்தைய காலங்களில் காதலர்கள் ரகசியமான சந்திப்புகளில் அவசரமாக முத்தமிட்டு கொள்வர். பார்வையால் முத்தங்களை கடத்தும் வல்லவர்களும் உண்டு. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. வாய்ப்புகளும் பெருகிவிட்டது. எமோஜிகளில் முத்தங்களை பறக்கவிடும் தலைமுறையிது. ஆனாலும் முகம் பார்த்துகொடுக்கும் முத்தம் தான் உறவை பலப்படுத்துகிறது என அனுபவித்தவர்கள் சொல்லி வருகின்றனர். இப்படி முத்தங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கும் வகையில் உருவானதுதான் 'முத்தத் தினம்'
முத்தத் தினத்தின் வரலாறு
பிரான்ஸ் நாட்டினர் 6ஆம் நூற்றாண்டில் ஒருவருக்கொருவர் நடனமாடியும், நடனம் முடிந்ததும் முத்தமிட்டும் தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். திருமணத்தின் போது உறுதிமொழி எடுக்கும்போது ரஷ்யாவில் முத்தமிடும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளும்போது ஒருவரையொருவர் முத்தமிடும் பாரம்பரியம் ரோமில் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக, ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்த முத்தமிட தொடங்கியுள்ளனர். இது நாளடைவில் உலகம் முழுக்க பரவியுள்ளது.
ஏன் முத்தமிட வேண்டும்?
முத்தமிடும்போது மனம் ஆறுதலடைகிறது. ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது அன்பும், மரியாதையும் அதிகரிக்கிறது. ஒருவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிடும்போது அவர் தன் சோகங்களை மறக்கிறார். பாதுகாப்பாக உணருகிறார்.
கைகளில் கொடுக்கும் முத்தம்
உறவை ஆரம்பிக்கும் ஈடுபாட்டின் அடையாளமாக இந்த முத்தம் கருதப்படுகிறது. மற்ற நாடுகளில் மரியாதை நிமித்தமாக இந்த முத்தத்தை கொடுத்து கொள்கிறார்கள்.
கன்ன முத்தம்!
காதலி, மனைவிக்கு மட்டுமில்லாமல் ப்ரியமானர்களுக்கும் கனிவாக அளிக்கும் முத்தமே கன்ன முத்தம். இதனை எஸ்கிமோ முத்தம் என்பார்கள்.
மென்மையான முத்தம்!
தினமும் காலை எழுந்ததும், வேலைக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் என இந்த முத்தத்தை மனைவிக்கு கொடுக்கலாம். உதட்டில் மென்மையாக உதட்டை ஒத்தி எடுக்கும் ஸ்வீட் முத்தம்.
ப்ரெஞ்ச் முத்தம்!
காதலியின் உதட்டில் அழுத்தமாக உங்கள் உதட்டைப் பதித்து வெகுநேரம் கொடுக்கும் முத்தம். இதில் நாக்கும் நாக்கும் போர் தொடுக்கும் அளவுக்கு இணக்கமும், ஆர்வமும் இருந்தால் நலம்.
நெற்றியில் எளிமையான முத்தம்!
இந்த முத்தம் பொதுவெளிகளிலும் கொடுக்கக் கூடிய முத்தம். இந்த முத்தத்தை பாதுகாப்புணர்வை கொடுக்கும் முத்தம் என்கிறார்கள். காதலர்கள் மட்டுமின்றி பெற்றோர், நண்பர்கள், அன்புக்குரியவர்கள் இந்த முத்தத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
காது மடலில் தொடங்கி கழுத்தில்...
காமத்திற்கு மரியாதை கொடுக்கும் முத்தங்கள் தான் காது மடல், கழுத்து பகுதிகளில் கொடுக்கும் முத்தம். இது காமத்தை தூண்ட கொடுக்கும் முத்தத்தின் ஒரு வடிவமாம். பாலியல்ரீதியான தூண்டலை தொடங்க இந்த முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
மூக்கு முத்தம்
முத்தங்களில் கொஞ்சம் குறும்புத்தனமானது மூக்கு முத்தம் தான். காதலில் இருப்பவர்கள் ஆசையாக இந்த முத்தத்தை கொடுத்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: Propose Day: நடிகை ஐஸ்வர்யா ராய்கிட்ட அபிஷேக் எப்படி லவ் சொன்னாரு தெரியுமா? இப்படி சொல்லி ப்ரபோஸ் பண்ணுங்க!
இதையும் படிங்க: Promise day: ஷாலினி சொல்லுக்கு கட்டுப்பட்டு 21 வருஷம் தாண்டி அஜித் காப்பாத்திட்டு வர்ற சத்தியம் பத்தி தெரியுமா
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.