உஷார்..! குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே...! விஷமாக மாறுகிறது நொறுக்குத்தீனி...!

First Published Feb 8, 2018, 2:04 PM IST
Highlights
kids used to have junk fruits leads to cancer


குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வளர்ந்து வரும் இன்றைய தலைமுறை குழந்தைகள்,நம் கண் முன்னே பல நோயால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது அல்லவா...

வயறு வலி தொடங்கி புற்று நோய் வரை அனைத்திற்கும் காரணமாக உள்ளது  நொறுக்கு தீனி

புற்றுநோய்க்கு காரணமாக உள்ள நொறுக்கு தீனி

குழந்தைகாளுக்கு அதிக அளவில் புற்று நோய் ஏற்படுவதில் இந்தியாவிலேயே  தமிழகம் தான் இரண்டாவது இடம்.அதாவது அந்த அளவிற்கு நம் குழந்தைகளுக்கு நாமே கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்கு தீனி என்ற பெயரில் விஷம் கொடுத்து  வந்துள்ளோம் என்றே கூறலாம்...

கலர் கலர் பொட்டலங்கள்

சூப்பர் மார்கெட் போகும் போது தெரியும்...குழந்தைகளுக்காகவே தனியாக அடுக்கி வைத்திருப்பார்கள்....நூடுல்ஸ் முதல் சாக்லேட் வரை அனைத்தும் இருக்கும். அதிலும்  சாயம் பூசப்பட்ட சாக்லேட், வண்ண வண்ண நிறத்தில் அழகழகாய் காட்சி அளிக்கும்...

பார்க்கும் போதே கண்ணை கவரும் இந்த வித விதமான நொறுக்கு தீனிகளும், பீட்சா கார்னர் சென்று ,பதப்படுத்தப்பட்ட அசைவ டிஷ் கொடுத்து அடிக்கடி வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே...

உங்கள் குழந்தயின் எதிர்காலத்திற்கு பணம் சொத்து சேர்ந்து வைத்தால் மட்டுமே  போதும் என  இன்று ஓடோடி உழைக்கின்றோமே....இது எல்லாம் யாருக்காக.....?

இந்த பணத்தையும் சொத்தையும் ஆள்வதற்கு முதலில் நம் பிள்ளைகள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தானே முடியும்...

சின்ன வயதிலே சுகர் வருவது.....வாய்க்கு ருசியாக சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட காரணம் இன்று  நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுத்து வரும் தேவை இல்லாத  நொறுக்கு  தீனிகள்.....

அதனால் தான்...அந்த காலத்து கூழ் கஞ்சி,கீரை,பருப்பு என உண்டு வந்த நம் தாத்தா பாட்டி முன்னரே, இளம் வயதினர் ஹார்ட் அட்டாக், புற்று நோய் என அனைத்திலும்  பாதிக்கப்படுகின்றனர்..

இது தொடர்பாக நம்மிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல நடிகை நடிகைகள் வீடியோ  பதிவை  வெளியிடுகின்றனர்.

இந்த செய்தியை இந்த ஆர்டிகல் மூலமாக நம் மக்களுக்கு தெரிவிப்பதில் ஏசியா நெட் நியூஸ் தமிழுக்கு கடமை உள்ளது என கூறி, நம் சந்ததியினரை பேணி காப்போம். 

இந்நிலையில் தான், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது என்பது  குறிபிடத்தக்கது.

காரணம் நிறைய நேரம் கார்டூன் சேனல் பார்க்கும் நம் குழந்தைகள் அதில்   காண்பிக்கப்படும்  நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு வாங்கி தர கோரி,பெற்றோரிடம்  அடம் பிடிக்கிறது.

பெற்றோர்களும் நோ சொல்லாமல் ஓகே சொல்கிறார்கள்....

இனி இது போன்று வேண்டாமே....பெற்றோர்களே....!

click me!