
இந்தியன் டாய்லெட் வெஸ்டர்ன் டாய்லெட்..! எது சரி தெரியுமா?
இந்திய டாய்லெட்
இந்தியன் டாய்லெட் பயன்படுத்தி வந்த காலம் சென்று தற்போது அனைவரின் வீட்டிலும் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது...ஆனால் இதில் எது சிறந்தது என்று பார்க்கும் போது கூட்டி கழித்து பார்த்தால் இந்தியன் டாய்லெட் தான் பெஸ்ட்
எப்படி?
இந்தியன் இந்திய டாய்லெட் பயன்படுத்தும் போது நம்முடைய முழங்கால் நன்கு மடக்கி பயன்படுத்துவோம் அல்லவா ? அப்போது மிக எளிதில் மலம் கழிப்பது மட்டுமல்லாது, நம்முடைய குடலியல் இயக்கம் சரியாக இருக்கும்...
மேலும்,வயதானவர்களுக்கு இந்தியன் இந்திய டாய்லெட்
சரியாக இருக்காதே என்று யோசனை செய்தல்,அதற்கும் வழி உண்டு...
வெஸ்டர்ன் டாய்லெட்
வெஸ்டர்ன் டாய்லெட்,கர்ப்பிணி பெண்கள்,வயதானவர்கள்,சர்ஜரி முடிந்தவர்கள் பயன்படுத்த ஏதுவான ஒன்று.
இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியுமா..?
கோப்பை,வளையம்,மூடி இது மூன்றும் அடங்கிது தான் வெஸ்டர்ன் டாய்லெட்
சிறுநீர் கழிக்கும் போது,மூடி மற்றும் வளையத்தை தூக்கி வைத்துவிட்டு தான் சிறுநீர் கழிக்க வேண்டும்.
இதே போன்று,மலம் கழிக்கும் போது மூடியை மட்டும் திறந்து வைத்து விட்டு , வளையத்தின் மீது அமர்ந்து பயன்படுத்த வேண்டும் காரணம், சிறுநீர் நம் உடல் தோலில் படாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ,கடந்த 10 வருடத்தில் மட்டும் அதிக மக்கள் மூட்டு வலியால் அவதி பட்டு வருகின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காரணம் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதே என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சிறு வயது முதலே இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்திவிட்டு, வயதான போது வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.