பெற்றோர்களே.. உங்க குழந்தைக்கு கேழ்வரகு இடியாப்பம் இப்படி செய்து கொடுங்க..!

By ezhil mozhiFirst Published Jul 24, 2019, 6:06 PM IST
Highlights

இன்றைய கால கட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை தான் கொடுக்கிறோமா என்பதை சிந்தித்து பார்த்து செயல்படுங்கள்.

பெற்றோர்களே.. உங்க குழந்தைக்கு கேழ்வரகு இடியாப்பம் இப்படி செய்து கொடுங்க..! 

கேழ்வரகு இடியாப்பம்

இன்றைய கால கட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை தான் கொடுக்கிறோமா என்பதை சிந்தித்து பார்த்து செயல்படுங்கள். அப்படி முடியவில்லை கேழ்வரகு பயன்படுத்தி செய்யப்பட்ட இடியாப்பத்தையாவது அடிக்கடி செய்து பரிமாறுங்கள்.உடல் நல்ல ஆரோக்கியம் பெரும். 

தேவையான பொருட்கள்:

பொருள் - அளவு

கேழ்வரகு மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

கடலை மாவு - கால் கப்

உப்புதேவைக்கேற்ப சுடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு மாவு 

செய்முறை 

கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுத்து ஆற  வைத்துக்கொள்ளவுங்கள். அதே போன்ற ஆவியில் கோதுமை மாவை வேக வைக்க வேண்டும். 

வறுத்த மாவுகளோடு ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து, ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். அவ்வளவு தான் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. 

வாரத்தில் ஒரு முறையாவது இது போன்று செய்து சாப்பிடுவது நல்லது.

click me!