படிக்கல படிக்கலன்னு சொன்னா உங்க குழந்தை எப்படி படிக்கும்..? முதல்ல உங்க வீட்டு அறையில் வாஸ்துப்படி இங்கு அமர்ந்து படிக்க சொல்லுங்க...

By ezhil mozhiFirst Published Jan 28, 2019, 3:41 PM IST
Highlights

நகர வாழ்க்கை முறைகளில் நம் குழந்தைகளுக்கான படிக்கும் அறையை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமாக மாறிவருகிறது. 

படிக்கல படிக்கலன்னு  சொன்னா  உங்க குழந்தை எப்படி படிக்கும்..? முதல்ல உங்க வீட்டு அறையில் வாஸ்துப்படி இங்கு அமர்ந்து படிக்க  சொல்லுஙக...

நகர வாழ்க்கை முறைகளில் நம் குழந்தைகளுக்கான படிக்கும் அறையை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமாக மாறிவருகிறது. எந்த விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என தனி கவனம் செலுத்தி நாம் அதனை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இது சிறப்பான பலன்களை தரும்.

குழந்தைகளுக்கான படிக்கும் அறை வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த பகுதியை ஒட்டிய வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொள்ளலாம்

முதல்ல உங்க வீட்டு அறையில் வாஸ்துப்படி இங்கு அமர்ந்து படிக்க சொல்லுஙக...

படிக்கும் அறை யின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அகலமான ஜன்னல்கள் இருப்பது முக்கியமானது குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு டேபிள் மற்றும் சேர் அமைக்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் படிக்கும் அறையில் கனமான பொருட்கள் எதுவும் வைக்கக் கூடாது அல்லது பரண்கள் போன்றவற்றை ரெடிமேடாக அல்லது கட்டுமானமாக கிழக்கு அல்லது வடக்கு சுவரில் அமைப்பது கூடாது.

தென் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கான படிக்கும் அறை வருவது நல்ல பலன்களைத் தருவதில்லை என்று வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து அறைகளுக்கும் பிங்க் அல்லது வெளிர்மஞ்சள் அல்லது வெளிர்பச்சை ஆகிய நிறங்கள் பொருத்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு வீட்டில் இது போன்ற படிக்கும் அறையை உருவாக்கி தரலாம். 

click me!