இந்த தீபாவளிக்கு பைனாப்பிளை வைத்து வீட்டுலேயே சுவையான சத்தான இனிப்பை செய்து அசத்துங்கள்..!

By Arun VJFirst Published Oct 22, 2019, 8:25 PM IST
Highlights

சரி இந்த தீபாவளியை இன்னும் சிறப்பிக்கும் விதமாக, மிகவும் சத்தான இனிப்பை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம் வாங்க.

தீபாவளி என்றாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான். புது துணி, பட்டாசு, என தீவாளியை வரவேற்காதர்வகள் யாரும் இல்லை. 

சரி இந்த தீபாவளியை இன்னும் சிறப்பிக்கும் விதமாக, மிகவும் சத்தான இனிப்பை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம் வாங்க.

பைனாப்பிள் ட்ரை புரூட் ஸ்வீட்...

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் - 1 1 /2 கப் 

சூடு படுத்திய பால் - 1 / 2 ஸ்பூன் 

நெய் - 1 / 2 ஸ்பூன் 

சர்க்கரை - 3 / 4 கால் கப்
ஏலக்காய் பொடி - 1 / 4 ஸ்பூன் 

சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட உளர் பழங்கள் மற்றும் பருப்புகள் (பாதம் , பிஸ்தா, முந்திரி, உளர் திராச்சை உள்ளிட்டவை) 1 / 2 கப்.

செய்முறை:

நறுக்கி வைத்த பைனாப்பிள் பழத்தை, ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி, மிதமான சூட்டில் நன்கு வேகும் வரை வதக்கவும்.

பின், அதனை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த பழத்தை, ஒரு கடாயில் போட்டு அது கூழ் பதத்திற்கு வரும் வரை அதாவது 10 நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதனுடன் சர்க்கரை கலந்து, இந்த கலவை இறுகும் வரை, கடாயில் மிதமான சூட்டிலேயே... நன்கு கிளறி விட வேண்டும்.

சூடு ஆகிற பிறகு, அதனை உங்களுக்கு பிடித்த வடிவத்தில், பிடித்து அதன் மேல், உளர் பழங்களோடு அழகு படுத்தி பரிமாறலாம்.

மிகவும் சத்துள்ளதாக இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.

click me!