Fruits and vegetables: வாரக்கணக்கில் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க...எளிய 5 டிப்ஸ்..

By manimegalai aFirst Published Jan 23, 2022, 12:37 PM IST
Highlights

பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்று கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை நிறைந்த மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, ஆடை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், எல்லா கால கட்டத்திலும், நாம் அனைவரும் ஒரு பொதுவான பிரச்சனையை எதிர்கொள்கிறோம். அதுதான் பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக வைத்திருப்பது.

 தற்போது நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா சூழ்நிலை, நம்மில் பலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வீட்டில் சேமித்து வைக்கிறோம். அவை, ஃப்ரிட்ஜில் இருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு பின் வாடிவிடுகிறது. இதற்கு காரணம் வானிலை, ஈரப்பதம், தயாரிப்பின் புத்துணர்ச்சி மற்றும் பலவாக இருக்கலாம்.

இவற்றை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தால், அவை சில நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க உதவும். ஆனால் நீங்கள் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க விரும்பினால், நீங்கள் இந்த எளிய முறைகளை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பலன் தரும். அவற்றை இந்த பதிவில் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

குளிர்ந்த நீரில் சேமிக்கவும்:

கேரட், செலரி, கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை ஒரு ஜாடி அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனில் சேமிக்கலாம். ஆனால், இந்த காய்கறிகளின் புத்துணர்ச்சியை நீடிக்க, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் தண்ணீரை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு இவற்றை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கலாம். இந்த வழியில், உங்களுக்கு தேவையான போது பொருட்களை புதியதாகவும் எளிதாகவும் வைத்திருக்க முடியும்.

வினிகர் பயன்படுத்தவும்:

ஒரு ஜாடி அல்லது ஒரு கொள்கலனில், தண்ணீர் மற்றும் சிறிது வினிகர் சேர்க்கவும். இந்த கலவையில், நீங்கள் எந்த வகையான பெர்ரி, ஆப்பிள்கள், பச்சை வெங்காயம், மிளகுத்தூள், தக்காளி அல்லது பேரிக்காய் ஆகியவற்றை நனைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்த கலவையில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும், பின்னர் அதை புதிய தண்ணீரில் கழுவவும். இப்போது, இதை உங்கள்  ஃப்ரிட்ஜில் சேமித்து   வைத்து நீண்ட நாட்கள் சேமிக்கலாம்.

காகித துண்டில் போர்த்தி அல்லது மடித்து வைத்தல்:

காகித பைகள் நாம் அனைவரும் ஏராளமாக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றாகும். காய்கறிகளை சேமிக்க இந்த காகித துண்டுகளையும் பயன்படுத்தலாம். இந்த ஹேக் பச்சை இலை காய்கறிகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இலைக் காய்கறிகள் சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதை காகித துண்டில் போர்த்துவது அதிகப்படியான ஈரப்பதத்தைத் தடுக்க உதவுகிறது.

வேரை வெட்டுங்கள்

டர்னிப், அஸ்பாரகஸ், பச்சை வெங்காயம் போன்ற சில வேர் காய்கறிகள் விரைவில் கெட்டுவிடும். அவை நீண்ட காலம் நீடிக்க, இவற்றின் வேர்களை வெட்டி தண்ணீரில் சேமிக்கவும். 

உறைய வைத்தல்

 ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கக்கூடிய பழங்கள் அல்லது காய்கறிகள் உங்களிடம் இருந்தால், அவற்றை ஒரு கொள்கலனில் மாற்றி, அவற்றை ஆழமான உறைவிப்பான் பெட்டியில் சேமிக்கவும். இந்த வழியில், அவை அழுகாது, மேலும் அவற்றை நீங்கள் பின்னர் பயன்படுத்தலாம்.

மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி உங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் ஃப்ரஷ்ஷாக வைத்திருங்கள்.

click me!