புற்றுநோய், மனச்சோர்வு, செரிமானத்தின் அபாயத்தை குறைக்கும் அவகேடோ பழம்...தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்டதா...?

manimegalai a   | Asianet News
Published : Jan 23, 2022, 10:11 AM IST
புற்றுநோய், மனச்சோர்வு, செரிமானத்தின் அபாயத்தை குறைக்கும் அவகேடோ பழம்...தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்டதா...?

சுருக்கம்

செரிமானத்தை மேம்படுத்துவது, மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாப்பது என இந்த பழம் பல்வேறு சிறப்புப் பண்புகளை கொண்டுள்ளது. 

ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோ பழமும் ஒன்று. பழங்கள் ஒவ்வொன்றும் ஒருவித, ஊட்டச்சத்துக்கள், நன்மைகளை வழங்குகின்றன. அவற்றுள் சில குறிப்பிட்ட பக்க விளைவுகள் இருப்பினும், பெரும்பாலும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. அவற்றுள், தனிச்சிறப்பு வாய்ந்த பழங்களில் ஒன்று அவக்கோடா பழம். செரிமானத்தை மேம்படுத்துவது, மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாப்பது என இந்த பழம் பல்வேறு சிறப்புப் பண்புகளை கொண்டுள்ளது. 

அலிகேட்டர் பேரிக்காய், ஆனைக்கொய்யா வெண்ணெய் பழம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் அவகேடோவில் கணிசமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியமான பழமான அவக்க்கோடவின் ஊட்டச்சத்து (Nutrients of the Fruit) பட்டியல் நீளமானது. வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 உள்ளன. ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட், பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் இந்தப் பழத்தில் உள்ளன. 

அதுமட்டுமல்ல, லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ளது ஆனைக்கொய்யா. ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது, மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையவும் உதவும் நல்ல கொழுப்பு அதிக அளவில் அவகேடோவில் உள்ளது. 

 அதிகரிக்கும் பார்வை திறன்

லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு அருமருந்து

ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும். மேலும், இந்தப் பழத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மனச்சோர்வு அபாயத்தையும் குறைக்கும். 

வளர்சிதை மாற்ற அபாயத்தைக் குறைக்கும்:

அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பீட்டா கரோட்டின் போன்ற பிற நன்மை பயக்கும் கொழுப்பில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்ற சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. எனவே, வயது மூப்பின் காரணமாக ஏற்படும் வளர்சிதை மாற்ற அபாயத்தைக் குறைக்க அவகேடோ உகந்தது.

எலும்புகளை வலுப்படுத்த தேவையான வைட்டமின் கே ஊட்டச்சத்து (Vitamin K) அவக்கோடாவில் கணிசமாக உள்ளது. பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. போதுமான வைட்டமின் கே உட்கொள்வது கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கும். எனவே அவகேடோவை அடிக்கடி சாப்பிடுவதால், கால்சியம் கழிவாக வெளியேறுவதை தடுப்பதோடு, எலும்புகளும் வலுப்பெறும். 

புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்:

ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.
 
உடல் எடை அதிகரிப்பு:

உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவாகும். இதில்,100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன.  

அவகேடோ:

ஃபோலேட் சத்து, ஒட்டுமொத்த உணவு ஆரோக்கியத்தில் (Nutrient for health) முக்கிய பங்கு வகிக்கிறது. ஹோமோசைஸ்டீன் உருவாக்கத்தைத் தடுக்க உதவுகிறது, இது மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதால், சிந்தனை செயலிழப்பு, மனச்சோர்வு, மனநிலை, தூக்கம் மற்றும் பசியின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.மேலும், இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. பித்தம் மற்றும் மலம் மூலம் நச்சுகளை வெளியேற்றுவதற்கு முக்கியமானது. மேலே குறிப்பிட்ட நன்மைகள் அவகேடோவில் இருப்பதால் இவை தாய் பாலுக்கு நிகரானவை என்று குறிப்பிடப்படுகிறது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து