
“கஞ்சா” உங்கள் பார்வைக்கு நல்லதா ?.....கெட்டதா..?
கஞ்சா ஒரு பக்கம் நல்லதாகவும்,மற்றொரு பக்கம் தீங்கு விளைவிக்க கூடியதாகவும் உள்ளது என ...... அறிவியல் பூர்வமாக பார்க்க முடிகிறது ......
ஆனால் உண்மையில் கஞ்சாவுக்கு இவ்வாறான இரண்டு குணங்களுமே உள்ளது. “tetrahydrocannabinol” மற்றும் “Cannabidiol” என்கின்ற இரண்டு குணகங்கள் கஞ்சா செடியில் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் “tetrahydrocannabinol” - தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி போதையை ஏற்படுத்துகின்றது.
அதே நேரத்தில் “Cannabidiol” - மன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிராகவும், நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளையும் அளிக்கின்றது.
குறிப்பிட்ட இருபாதார்த்தங்களும் அதிகமாகியும் குறையும் பட்ச்சத்தில் தான் போதை தோற்றம் பெறுகின்றது.அதிகமான நாடுகளில் சட்டதிற்குபுரம்பாக விற்கப்படும் கஞ்சாவில் “tetrahydrocannabinol” அளவு 15 வீதம் வரை காணபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கஞ்சாவிற்கு அடிமையானர்களை கஞ்சாகொண்டே சரிபடுத்த சில ஆய்வுகளும் நடைபெற்றுவருவதோடு“Cannabidiol” யை பயன்படுத்தவைப்பதன் மூலம் இதன் பாதிப்பை குறைக்கமுடியும் என்ற கோட்பாடிற்கு ஏற்ப தற்போதைய விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.