கைகள் அழுக்காக இருந்தால் பல வகையான தொற்றுகள் பரவும், அதனால் கை சுகாதாரம் மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி உலகளாவிய கை கழுவுதல் தினம் அனுசரிக்கப்படுகிறது. சரி கை கழுவும் பழக்கம் எத்தனை நோய்களை குறைக்கும் தெரியுமா?
கடந்த 2008 ஆம் ஆண்டு குளோபல் ஹேண்ட் வாஷிங் பார்ட்னர்களால் இந்த நாள் தொடங்கப்பட்டது. குறைந்தது 30 வினாடிகளுக்கு சோப்பு போட்டு கைகளை கழுவுவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக காலரா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப் புழுக்கள், நிமோனியா, கோவிட் போன்ற பல நோய்களைத் தவிர்க்கிறோம்.
வயிற்றுப்போக்கு அபாயத்தைக் குறைக்கிறது
வயிற்றுப்போக்கு மற்றும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் மிகப்பெரிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் தான் உணவை அழுக்கான கைகளால் உண்ணக் கூடாது. கெட்ட உணவுகளை சாப்பிட்டாலும் வயிறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
உங்கள் துணை உங்களுக்கு உண்மையாக இருக்கிறாரா? இதை எல்லாம் செய்தால் நீங்க ரொம்ப லக்கி..!
கண்னுக்கு பரவும் தொற்றை தடுக்கலாம்
அசுத்தமான கைகளால் கண்களைத் தொடுவதே கண் தொற்றுக்கு முக்கியக் காரணம். இதனால் கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கண்களைத் தொடும் முன் இதை மனதில் கொள்ளுங்கள். கடுமையான அரிப்பு அல்லது கண்களில் ஏதேனும் தூசு விழுந்தால் மென்மையான துணியைப் பயன்படுத்தி துடைக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சுவாச தொற்று தடுப்பு
இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு உடனடியாக உங்கள் கைகளை கழுவவும். இதைச் செய்யாவிட்டால், இந்தப் பிரச்சனைகள் மற்றவர்களுக்குப் பரவும். ஏனெனில் நீங்கள் தும்மிய பிறகு மற்றவர்களுடன் கைகுலுக்கினால் உங்கள் கைகளில் இருந்து மற்றவரின் கைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவும் வாய்ப்பு அதிகம்.