"மாட்டு சாணத்தில் காகிதம்" அமெரிக்கா வரை விற்பனை...சொன்ன நம்ப மாட்டீங்க.. ஆனா அதான் உண்மை..!!

Published : Aug 14, 2023, 08:19 PM IST
"மாட்டு சாணத்தில் காகிதம்" அமெரிக்கா வரை விற்பனை...சொன்ன நம்ப மாட்டீங்க.. ஆனா அதான் உண்மை..!!

சுருக்கம்

ராஜஸ்தானை சேர்ந்த பீம்ராஜ் சர்மா என்பவர் பசுவின் சாணத்தில் காகிதம் தயாரிக்கும் தொழில் தொடங்கிய போது மக்கள் அவை கேலி செய்தனர். இப்போது பசுவின் சாணத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். அவர்களின் தயாரிப்புகள் அமெரிக்கா வரை விற்கப்படுகின்றன.

பீம் ராஜ் ஷர்மா ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சுதர்சன்புரா தொழிற்பேட்டையில் அர்ச்சகம் வைத்துள்ளார். அங்கு மாட்டு சாணத்தில் காகிதம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயார் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 20 ஊழியர்கள் பணி புரிகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறது. பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் வியாபாரம் என்று கேட்டால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

பீம்ராஜ் ஷர்மாவின் பணி தொடக்கம்:
பீம்ராஜ் சர்மா 2016- 17-ல் ஆண்டில் இந்த பணியை தொடங்கினார். முதல் காகிதம் பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் சந்தையின் நல்ல வரவேற்பு பெறவில்லை. காகிதத்தின் தரம் அனைத்து வகையான வேலைகளுக்கும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அவர் ஆராய்ச்சி செய்தார். வெற்றி கண்டார். இது குறித்து அவர் கூறுகையில், காகிதத்தை விட அதிகமாக செய்ய முடியாது என்று நாங்கள் உணர்ந்த போது மாட்டு சாணத்தில் இருந்து மற்ற பொருட்களை உருவாக்கினோம். பசுவின் சாணத்தி இருந்து காகிதம் தயாரிப்பது சூத்திரமும் காப்புரிமை பெற்றது.
 
பசுவின் சாணத்தில் பொருட்கள்:

டைரிகள், காலண்டர்கள், பைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. 

எப்படி பசுவின் ஸ்தானத்தில் காகிதம் தயாரிக்க ஆரம்பித்தார்?
முதலில் தீபாவளி அன்று பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் விளக்குகளை விற்பனை செய்தார். ஆனால் தற்போது யானை சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் விளக்குகள் பிரபலமாகிவிட்டதால் பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் காகிதத்தை தயாரிக்கலாம் என்று எண்ணினார். அவர் எண்ணத்தின்படியே தற்போது பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் காகிதம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பசுவின் சாணத்தை கிலோ 10 ரூபாய்க்கு வாங்குவதாகவும் பசுவின் ஸ்தானத்திலிருந்து காகிதம் தயாரிக்க முக்கிய நோக்கம் பசுவை தன்னிறைவாக ஆக்குவதாகும் என்று கூதினார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்