கால் மேல் கால் போட்டு அமருவது முற்றிலும் தவறு - ஏன் தெரியுமா..?

 
Published : May 26, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கால் மேல் கால் போட்டு அமருவது முற்றிலும் தவறு - ஏன் தெரியுமா..?

சுருக்கம்

It is absolutely wrong to put the cross legs while sitting

வீட்டிலோ, பொது இடங்களிலோ சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என பல சமயங்களில் நாம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்போம்.

முன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என கூறுவார்கள்.

இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய உலகில் இது சர்வசாதாரணம்.

ஆனால், சமீபத்திய அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள்..!

ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும் வாடிக்கை அதிகமாக இருக்கிறது.

இதை அழகு நயம் வாய்ந்தது அல்லது பெண்பால் உடல்மொழி என்பது போன்ற மனப்பான்மை உருவாகும் அளவிற்கு பெண்கள் அதிகமாக கால் மீது கால் போட்டு அமர்கிறார்கள்.

ஒரே நிலையில்..!

கால் மீது கால் போட்டு அல்லது கால்களை மடக்கி ஒரே நிலையில் பல மணி நேரம் அமர்ந்திருத்தல் ஆழப் பெரோன்னியல் நரம்பு (peroneal nerve ) எனும் பாரலசிஸ் உண்டாக காரணியாக அமைகிறது.

முக்கியமாக கால்களை குறுக்காக, கால் மீது கால் போட்டு அமரும் போது இது உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

2016 ஆய்வு

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கால் மீது கால் போட்டு நீண்ட நேரம் அமர்வது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

மேலும் இரத்த அழுத்தம் சார்ந்த வேறுசில உடல்நல குறைபாடுகள் ஏற்படவும் இது காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது உடல் முழுவதும் சீரான முறையில் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து, ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறது.

இரத்த ஓட்டம்..!

கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது.

இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது.

இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.

இடுப்பு நிலை

நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி அதிகமாகலாம்.

ஸ்பைடர் வெயின்..!

சிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள்.

கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.

மூன்று மணிநேரம்

ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது.

எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்து விடுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்