இப்ப.. இஸ்ரோ சிவன் சொன்ன ஒரே வாரத்தை..! அசந்து போன ஒட்டு மொத்த இந்தியர்கள்..!

By ezhil mozhiFirst Published Sep 10, 2019, 2:00 PM IST
Highlights

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்ட ஜூலை 22 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் வழிமேல் விழி வைத்து உன்னிப்பாக கவனித்து வந்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இப்ப.. இஸ்ரோ சிவன் சொன்ன ஒரே வாரத்தை..! அசந்து போன ஒட்டு மொத்த இந்தியர்கள்..!  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரான சிவன் மனமுருக சிறப்பு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்ட ஜூலை 22 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் வழிமேல் விழி வைத்து உன்னிப்பாக கவனித்து வந்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆனால் செப்டம்பர் ஏழாம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் சந்திரயான் 2 நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நிலவின் மேற்பரப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மூழ்கியது இஸ்ரோ மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவும் கூட.

அதன் பின்னர் இந்த நிகழ்வை நேரில் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியும் கொஞ்சம் அப்செட் ஆனார். ஆனாலும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தார். குறிப்பாக எமோஷன் தாங்க முடியாமல் அழுத இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித்தழுவி அரவணைத்து தட்டிக் கொடுத்த வீடியோ பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த இஸ்ரோ தலைவர் சிவனிடம் நெறியாளர் கேட்ட, "ஒரு தமிழனாய் தமிழ் மக்களுக்கு சொல்வது என்ன? என்ற கேள்விக்கு 'நான் ஓர் இந்தியனாக தான் இஸ்ரோவில் சேர்ந்தேன்; அங்குதான் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வருகை புரிந்திருக்கும் பல்வேறு மொழிகளைப் பேசும் விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றனர்; அதே வேளையில் என்னை தூக்கி வைத்து கொண்டாடிய என் தமிழ் மக்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்; மிகுந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் என்னை ஒரு தாய் போல் கட்டி தழுவி தட்டி கொடுத்த மோடி அவர்களையும், அந்த ஒரு நிகழ்வையும் என் வாழ் நாளில் கடைசி வரை மறக்கவே முடியாது..! என மனமுருகி தெரிவித்து உள்ளார்.

click me!