ரஜினியின் இறங்கி வராத ஈகோ!: யார் மீது?

By Vishnu PriyaFirst Published Nov 19, 2019, 8:38 PM IST
Highlights

விஜய்யும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தாலும் நடிக்கிறார்கள், அவர்கள் இருவரையும் சுற்றியே கோலிவுட்டில் பல செய்திகள் புகைகிறது. லேட்டஸ்டாக “ என் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் படத்தின் கதையை முதலில் மாஸ் ஹீரோ கதையாகத்தான் எழுதினேன். 

ரஜினியின் இறங்கி வராத ஈகோ!: யார் மீது?

*    அறுபது வயதில் பாதியை கடந்துவிட்ட ஹீரோயின்களும் கூட ‘கல்யாணத்துக்கு இப்ப என்னபா அவசரம்?’ என்று கேட்பார்கள். ஆனால் நிக்கி கல்ராணி இதில் வித்தியாசம். தனது காதலரை சென்னையில்தான் சந்தித்தேன்! அவரோடுதான் தனக்கு திருமணம்! இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் திருமணத்துக்கு! அந்த நபர் யாரென இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது! என கூறியுள்ளார். 
(தில் ராணி)

*    விஜய்யும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தாலும் நடிக்கிறார்கள், அவர்கள் இருவரையும் சுற்றியே கோலிவுட்டில் பல செய்திகள் புகைகிறது. லேட்டஸ்டாக “ என் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் படத்தின் கதையை முதலில் மாஸ் ஹீரோ கதையாகத்தான் எழுதினேன். தெலுங்கில் பவன் கல்யாணுக்காக எழுதப்பட்டது. தமிழிலில் தளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென நினைத்தேன். ஆனால் பவன் அரசியலுக்குள் இறங்கிவிட்டதால், தமிழில் விஜய் சேதுபதியை வைத்து துவங்கினோம். அவருக்காக டயலாக்குகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.” என சொல்லி இருக்கிறார். 
(நல்லவேளை விஜய் பொழச்சுட்டார்)

*    வாய்ப்பே இல்லாத இயக்குநர்கள்தான் வெப்சீரீஸ் பக்கம் போறாங்கன்னு பார்த்தால், இந்திய சினிமாவே பாராட்டிய ‘அசுரன்’ படத்தை தந்த வெற்றிமாறனும் வெப்சீரிஸ் இயக்குகிறார். அதிலும் சாதாரண நடிகர், நடிகைகள் இல்லை. சாய்பல்லவி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து இயக்குகிறார். இது அவரது அடுத்த சினிமாவுக்கு முந்தைய குறுகிய கால படைப்பாம். 
(தனுஷை மறந்துட்டீங்க பாஸு)

*    அஞ்சான் படத்தில் ‘ஏக் தோ தீன்’ என்று டக்கராக பாடிய சூர்யா, அடுத்தடுத்து பாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனுஷன் பாடவில்லை. இந்த சூழலில், இப்போது ஜி.வி.பிரகாஷ் இசையில் தனது சூரரைப் போற்று படத்துக்காக ஒரு ராப் பாடல் பாடியுள்ளார். 
(இந்தப் படமாச்சும் ஜெயிக்கட்டும்)


*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் காமெடிக்கு சூரி ஒப்பந்தமாகிறார் என்று பேச்சு. ஆனால் ரஜினிக்கு இதில் பெரிய ஈடுபாடில்லை. தர்பாரில் யோகிபாபு இருக்கும் நிலையில், சந்தானம் காமெடி பண்ணுவதில்லை, விவேக்கின் காமெடிகள் இப்போதெல்லாம் சிரிப்பை தருவதில்லை, எனும் நிலையில் வடிவேலுதான் ஒரே சாய்ஸ். ஆனால் ரஜினியின் ஈகோ இறங்கி வர மறுக்கிறதாம். 
-    விஷ்ணுப்ரியா

click me!