பாத வெடிப்பு வராமல் முற்றிலும் தடுக்க சூப்பர் ஐடியா இதோ...!

By ezhil mozhiFirst Published Nov 19, 2019, 8:34 PM IST
Highlights

தினமும் நம் பாதத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் பாத வெடிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம். முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள எத்தனையோ விதங்களில் நாம் முயற்சி செய்து பார்க்கிறோம்.

பாத வெடிப்பு வராமல் முற்றிலும் தடுக்க...! சூப்பர் ஐடியா இதோ...! 

அதிக உடல் எடை காரணமாகவும் தோல் வளர்ச்சியின் காரணமாகவும் பொதுவாக பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் மிக எளிதான வழி முறை இப்போது பார்க்கலாம்.

தினமும் நம் பாதத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் பாத வெடிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம். முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள எத்தனையோ விதங்களில் நாம் முயற்சி செய்து பார்க்கிறோம்.ஆனால் பாத வெடிப்பு குறித்து அந்த அளவிற்கு பராமரிப்பு செய்வது கிடையாது என்றே கூறலாம் .குறிப்பாக நம் உடலில் நீர்சத்து குறையும் போது தோல் வெடிப்பு ஏற்படும். அதே போன்று மிக முக்கியமாக குளிர்காலத்தில் மிக எளிதாக பாத வெடிப்பு ஏற்படும்.

உடல் எடை சற்று அதிகமானால்...அதிக வெடிப்பு உண்டாகும். இதற்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளையில் கால்களை நன்கு கழுவி தேங்காய் எண்ணெய் தடவி வந்தால், வெடிப்பு வரவே வராது. அதேபோன்று ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பாத வெடிப்பு இருப்பவர்கள் முறையாக பராமரித்து கொள்வது நல்லது. குறிப்பாக இறுக்கமான காலணிகளை அணிதல் கூடாது. மேலும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே யாராக இருந்தாலும் தூய்மையாக வைத்துக் கொண்டு மிக லேசான காலணிகளை அணிவது மிகவும் நல்லது.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக பாத வெடிப்பு வருவதை முற்றிலும் தடுக்க முடியும். 

click me!