
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான பெண்களின் உரிமையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.. உலக அளவில் பெண்களை போற்றும் நாளாகவும், அவர்களின் கொண்டாடும் நாளாகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினம் 2024
1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நியூயார்க்கில் தேசிய மகளிர் வரலாற்று மாதம் தொடங்கியது, பெண் ஜவுளித் தொழிலாளர்கள் நியாயமற்ற வேலை சூழல் மற்றும் பாரபட்ச ஊதியத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். உழைக்கும் பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் வேலைநிறுத்தங்களில் இதுவும் ஒன்றாகும். பின்னர், 1908 ஆம் ஆண்டு இதே நாளில், குழந்தை தொழிலாளர் மற்றும் பாரபட்சமான தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நியூயார்க்கில் ஊசி வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.நா பொதுச் சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக முறைப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம் 2024 : கருப்பொருள்
பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் என்பதே இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருள் ஆகும். பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்துவதும், அவர்களின் மதிப்பைப் புரிந்துகொள்வதும் இதன் நோக்கம் ஆகும் ஆகும்.
சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வண்ணங்கள்:
ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகியவை சர்வதேச மகளிர் தினத்தின் நிறங்கள். ஊதா நிறம் நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது, பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. மறுபுறம், வெள்ளை தூய்மையைக் குறிக்கிறது.
2024 மகளிர் தினத்திற்கான முழக்கங்கள்:
என் உடல், என் உரிமை.
நாம் அனைவராலம் அதை செய்ய முடியும்! நாங்கள் பெண்கள்.
எதிர்காலமே பெண்.
பெண்களுக்காக எழுந்து நில்லுங்கள், இது மகளிர் தினம்
சம உரிமை என்பது சிறப்பு உரிமைகள் அல்ல.
பெண்களின் உரிமைகளை விட்டுவிடாதீர்கள்.
பெண்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள்.
சமத்துவம் என்பது நமது உரிமை, சலுகை அல்ல.
வலுவான பெண்கள், வலுவான உலகம்.
ஒவ்வொரு நாளும் அவளுடைய கதையைக் கொண்டாடுங்கள்.
கடுமையான, அற்புதமான, பெண்.
சமத்துவத்திற்கு பாலினம் தெரியாது." சமத்துவத்திற்கு பாலினம் தெரியாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.