தினசரி 9 மணி நேரம் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம்... அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Dec 1, 2019, 12:55 PM IST
Highlights

தினசரி 9 மணி நேரம் தொடர்ந்து 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் அளிப்பதாக பெங்களூர் மெத்தை நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

தினசரி 9 மணி நேரம் தொடர்ந்து 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் அளிப்பதாக பெங்களூர் மெத்தை நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வேளைக்கு செல்லாமல் எந்நேரமும் தூங்கி கொண்டு இருப்பவர்களை சோம்பேறி என திட்டுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் தூங்குவதையே வேலையாக்கி அவர்களுக்கு கை நிறைய சம்பளம் கொடுக்கிறது ஒரு நிறுவனம். ''தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை பொய்யாக்கி உள்ளது பெங்களூருவை சேர்ந்த வேட் ஃபிட் நிறுவனம். ஆம்.. இந்த மெத்தை விற்பனை நிறுவனம் தூங்குவோருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது என்றே கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஸ்லீப் இன்டெர்ஷிப் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தினமும் இரவில் 9 மணி நேரம் என 100 நாட்களுக்கு தூங்குபவர்களுக்கு 1 லட்சம் ரூபாயை சம்பளமாக வழங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தூங்கும் வேளைக்கு தகுதி பெறுபவர்கள் அந்த நிறுவனம் தரும் மெத்தையில் தான் தூங்க வேண்டும். இவர்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்பதை அறிய கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். 

இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில் மக்களின் தூக்க முறைகளை கண்காணித்து அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. நல்ல தூக்கம் எந்த அளவுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. தூக்கம் இல்லை என்றால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது எந்த நேரத்தில் தூங்க வேண்டும். எப்படி தூங்க வேண்டும் என்பன போன்ற பல கேள்விகளுக்கு இது விடையைத் தேடுகிறது. இந்த உறக்கத்தின் போது, கட்டாயம் லேப்டாப், செல்போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் டிரஸ் கோட் கட்டாயம். பைஜாமா அணிந்துதான் தூங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!