ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் அவலநிலை...! எதற்காக இந்த பாதுகாப்பு தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Nov 30, 2019, 7:46 PM IST
Highlights

பீகார் மாநில கூட்டுறவு சங்கத்தின் சார்பாக மலிவு விலையில் மக்களுக்கு வெங்காயத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக டோக்கன் வழங்கி வினியோகம் செய்து வருகிறது. 

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் அவலநிலை...! எதற்காக இந்த பாதுகாப்பு தெரியுமா..?  

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநில கூட்டுறவு சங்கத்தின் சார்பாக மலிவு விலையில் மக்களுக்கு வெங்காயத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக டோக்கன் வழங்கி வினியோகம் செய்து வருகிறது. வெங்காயத்தை பெறுவதற்காக பொதுமக்கள் விடியற்காலை முதலில் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று பின்னர் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

இது போன்று பல இடங்களில் வினியோகம் செய்த போது வெங்காய தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கோபத்தில் கல்லைக் கொண்டு எறிவதும், அதே வெங்காயத்தில் அடிப்பதுமாக சில சம்பவங்கள் நடந்து உள்ளது. இதன் காரணமாக வெங்காய விற்பனை செய்யும் கூட்டுறவு அதிகாரிகள் ஹெல்மெட் அணிந்து வினியோகம் செய்கின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக சில நேரங்களில் கல்லெறியும் சம்பவம் நடைபெறுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை கருதி ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்பதாக தெரிவிக்கிண்டனர். 

click me!