பெண்களுக்காகவே ஸ்பெஷல் "மதுபார்"..! தமிழகத்தில் முதல் முறையாக..! வரவேற்பா..? எதிர்ப்பா ..?

By ezhil mozhi  |  First Published Nov 30, 2019, 7:13 PM IST

மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது.


பெண்களுக்காகவே ஸ்பெஷல் "மதுபார்"..! தமிழகத்தில் முதல் முறையாக..! வரவேற்பா..? எதிர்ப்பா ..? 

மதுக்கடைக்கு எதிராக பெண்கள் அவ்வப்போது ஆங்காங்கு போராட்டம் நடத்துவதை பார்க்க முடிகிறது. காரணம் மதுவினால் சீரழிந்து வருவதும் அதனால் குடும்பம் பெருமளவு பாதிக்கப் படுவதும் குடியிருப்புக்கு அருகே மதுக்கடை வைப்பதால் பெண்கள் பெருமளவு பாதிக்கப் படுவார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த ஒரு நிலையில், பெண்களுக்கு என்று சிறப்பாக மதுக்கூடம் ஒன்றை மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மதுரை மக்கள் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில காலங்கள் மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது. 

மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது. இது நாள் வரை ஆண்கள் தான் பொதுவாக மது பாருக்கு செல்வார்கள். நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வார்கள். ஒரு சில பெண்களும் செல்வார்கள்.. ஆனால் இதுவரை பெண்களுக்கென்றே மதுக்கூடம் எங்கும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையில் தான் பெண்களுக்கென்றே வைக்கப்பட்டுள்ள சிறப்பு மதுக்கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!