ஆண் குழந்தைக்காக வரம்பு மீறி தீராத உறவில் ஈடுபட்ட பெண்..!! நேர்ந்த பயங்கர விளைவு..!!

Published : Nov 28, 2019, 12:29 PM IST
ஆண் குழந்தைக்காக வரம்பு மீறி  தீராத உறவில் ஈடுபட்ட பெண்..!! நேர்ந்த பயங்கர விளைவு..!!

சுருக்கம்

பேரன் பேத்தி எடுத்துள்ள நிலையிலும் ஓயாத இத்தம்பதியர் ஒன்றன் பின் ஒன்றாக பிள்ளை பெற்றுள்ளனர்,  முதலில் பிறந்த 11 குழந்தைகளும் பெண்பிள்ளைகள் என்பதால் எப்படியாவது ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்துவிட வேண்டும் என்பதன் விளைவுதான் அடுத்தடுத்த கர்பத்திற்கு காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.  

ஏற்கனவே பதினோரு பிள்ளைகளைப் பெற்று பேரன் பேத்தி எடுத்துள்ள நிலையில்  ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியர், 12 வதாக ஒரு ஆண்குழந்தையை பெற்றுள்ளனர் இதைக் கேள்விப்படுபவர்களை இத்தம்பதியர் அப்படியா என வாய்பிளக்க வைத்துள்ளனர்.  இப்போதெல்லாம் ஆசைக்கு ஒன்னு,  ஆள்வதற்கு ஒன்னு,  என இரண்டு  குழந்தைகளோடு இருந்துவிடுவது  வழக்கமாகிவிட்டது.  இன்னும் சிலர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குள் படாதபாடுபட்டு விடுகின்றனர் . 

ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் 12 குழந்தைகளை பெற்று எடுத்துள்ளது,  பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ஜாத்சர் நகரை சேர்ந்த பெண்  கதி,  இவருக்கு (வயது 42)  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.  ஏற்கனவே  இவருக்கு 11 குழந்தைகள் உள்ள நிலையில் 12வதாக  பிள்ளை பெற்றிருக்கிறார்  இந்த பெண்மணி.  தன் மூத்த மகளுக்கு 22 வயது ஆகி உள்ள நிலையில் தனது 2 மகள்களுக்கு திருமணம் கட்டிக்கொடுத்து அவர்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது.  பேரன் பேத்தி எடுத்துள்ள நிலையிலும் ஓயாத இத்தம்பதியர் ஒன்றன் பின் ஒன்றாக பிள்ளை பெற்றுள்ளனர்,  முதலில் பிறந்த 11 குழந்தைகளும் பெண்பிள்ளைகள் என்பதால் எப்படியாவது ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்துவிட வேண்டும் என்பதன் விளைவுதான் அடுத்தடுத்த கர்பத்திற்கு காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு 12 குழந்தைகள் வரை பெற்றுவிட்டதாக அத்தம்பதியரும் தெரிவித்துள்ளனர்.  மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் ஆண்பிள்ளை  இல்லாதவர்கள் ஆண் குழந்தைக்காகவும், பெண் பிள்ளை இல்லாதவர்கள் பெண் குழந்தைக்காகவும் ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான் ஆனால்  இந்த விஷயத்தில் கதி விடாமுயற்சி ஆக இருந்து வெற்றி பெற்றுவிட்டார் என  அப்பெண்ணை வாழ்த்துகின்றனர். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்