4 பெண் குழந்தைகள்... சாப்பிடகூட வழியில்லை...!! அடித்தது லாட்டரியில் 60 லட்சம்..!!

Published : Nov 08, 2019, 06:29 PM IST
4 பெண் குழந்தைகள்... சாப்பிடகூட வழியில்லை...!!  அடித்தது  லாட்டரியில் 60 லட்சம்..!!

சுருக்கம்

அப்போது  நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்க்கலாம் என்று அரசு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.  அவர் எண்ணியதைப் போலவே,  அவருக்கு  அதிர்ஷ்டம் அடித்தது.  கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று சொல்வார்களே,  அதைப்போல,  லோகாவுக்கு 60 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. தனக்கு பரிசு விழுந்ததை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்த லோகா, ஒரு கணம் கண்ணீர் விட்டு அழுதார். நம்ப முடியாத மகிழ்ச்சியில் உள்ள அவர்.  இது குறித்து தெரிவிக்கையில்,

4 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண்ணுக்கு லாட்டரி சீட்டு மூலம் 60 லட்ச ரூபாய் பரிசு அடித்துள்ளது.  இது தலைகீழாக இருந்த அந்த பெண்ணின் வாழ்க்கையையே நேராக நிமிர்த்தி உள்ளது. எதிர்பாராத நேரத்தில் கிடைத்த பரிசால்  அந்த பெண் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஆரிய நாடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்,  இவருக்கு லோகா என்ற மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர்.  லாரி ஓட்டுநரான பிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஊனமடைந்தார். இதனால் அவரால் வேலைக்குச்  செல்ல முடியாமல்,  அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிவந்தது. 

இந்நிலையில் மனைவி லோகா, தங்கள்  வாழ்க்கை இப்படியே வருமையில் போகிறதே.?  வாழ என்ன வழி என்று யோசித்தார், அப்போது  நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்க்கலாம் என்று அரசு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.  அவர் எண்ணியதைப் போலவே,  அவருக்கு  அதிர்ஷ்டம் அடித்தது.  கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று சொல்வார்களே,  அதைப்போல,  லோகாவுக்கு 60 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. தனக்கு பரிசு விழுந்ததை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்த லோகா, ஒரு கணம் கண்ணீர் விட்டு அழுதார். நம்ப முடியாத மகிழ்ச்சியில் உள்ள அவர்.  இது குறித்து தெரிவிக்கையில்,

 என் கணவர் விபத்தில் சிக்கியதால் அவரால் வேலைக்கு போக முடியவில்லை.  இனி எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையில் இருந்த எங்களுக்கு கடவுளாக பார்த்து பணம் கொடுத்துள்ளார்.  தற்போது லாட்டரியில் விழுந்த 60 லட்ச ரூபாய் பணத்தை வைத்து புதிய வீடு ஒன்று வாங்குவதுடன்,  சொந்தமாக தொழில் தொடங்கப் போவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்