ரசிகனின் வெறிச்செயல்..! கல்யாணத்தன்று படம் ரிலீஸா.? கல்யாணத்த நிறுத்து... எனக்கு படம் தான் முக்கியம்..!

Published : Nov 08, 2019, 06:21 PM IST
ரசிகனின் வெறிச்செயல்..! கல்யாணத்தன்று படம் ரிலீஸா.?  கல்யாணத்த நிறுத்து... எனக்கு படம் தான் முக்கியம்..!

சுருக்கம்

கேரள மாநிலம் பரவூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மேமன் சுரேஷ் என்பவர். இவர் நடிகர் மம்முட்டிக்கு தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டி நடித்து வெளியாகும் எந்த ஒரு படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவருடைய பழக்கம். 

ரசிகனின் வெறிச்செயல்..! கல்யாணத்தன்று படம் ரிலீஸா.?  கல்யாணத்த நிறுத்து...எனக்கு படம் தான் முக்கியம்..!  

நடிகர் மம்முட்டியின் ரசிகர் ஒருவர்,பட ரிலீசு தேதியை  காரணம் காட்டி தன்னுடைய திருண தேதியையே மாற்றி உள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாநிலம் பரவூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மேமன் சுரேஷ் என்பவர். இவர் நடிகர் மம்முட்டிக்கு தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டி நடித்து வெளியாகும் எந்த ஒரு படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவருடைய பழக்கம். இந்த நிலையில் இவருக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடைப்பட்ட நேரத்தில்  மம்முட்டி நடித்த மாமங்கம் என்ற திரைப்படம், மேமன் சுரேஷுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண தேதியான 21ஆம் தேதி அன்றே ரிலீஸாக உள்ளதால் தன்னுடைய திருமண தேதியை 21ம் தேதிக்கு பதிலாக 30 ஆம் தேதி திருமண தேதியாக மாற்றியுள்ளார்

அதாவது சென்ற 30ஆம் தேதியன்று, இவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது, பின்னர் புதுமண தம்பதிகளாக வரும் 21ஆம் தேதி மம்முட்டி நடித்து வெளியாக உள்ள மாமங்கம் என்ற திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார், இந்த ஒரு விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, இப்படியும் ஓர் ரசிகரா? மம்முட்டி கொடுத்துவைத்தவர். என்றெல்லாம் விமர்சனங்கள் தொடங்கியுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்