1 மணி நேரத்தில் 20 முறை உங்கள் முகத்தில் கை வைத்தால் என்னவாகும் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Mar 4, 2020, 7:00 PM IST
Highlights

நிலைமை இப்படி இருக்கும்போது, ஒருவர் ஒரு மணி நேரத்தில் தன்னுடைய கையை 20 கும் அதிகமான முறையில் முகத்தில் வைக்கிறார் என்றால் அவருக்கு மிக எளிதாக எந்த ஒரு வைரஸாக இருந்தாலும்  மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

1 மணி நேரத்தில் 20 முறை உங்கள் முகத்தில் கை வைத்தால் என்னவாகும் தெரியுமா..? 

மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

அந்த வகையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து முறையாவது சோப்பு போட்டு கை கழுவுதல் வேண்டும். வெளியில் சென்று வரும்போது கை கால் முகத்தை கழுவிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய வேண்டும். குறிப்பாக அதிக கூட்டம் இருக்கும் இடத்திலும் பொதுவெளியில் நடக்கும் போதும், பேருந்தில் பயணிக்கும் போதும், காரில் பயணம் செய்யும் போதும் நாம் தொடுகிற கைப்பிடி, மற்றவர்களோடு கைகுலுக்கி பேசுவது என இவை அனைத்தும் தவிர்க்க முடியாத ஒரு நிலையாக இருந்தாலும், வீட்டிற்குள் நுழையும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

நிலைமை இப்படி இருக்கும்போது, ஒருவர் ஒரு மணி நேரத்தில் தன்னுடைய கையை 20 கும் அதிகமான முறையில் முகத்தில் வைக்கிறார் என்றால் அவருக்கு மிக எளிதாக எந்த ஒரு வைரஸாக இருந்தாலும்  மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

அதாவது எப்போதும் வைரஸ் தாக்கம் என்பது நம் கைகள் மூலமாக மிக எளிதில் சுவாசப்பாதை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் கைகளை கொண்டு அடிக்கடி கண்களை தேய்ப்பது, மூக்கில் விரல் வைப்பதோ, வாயில் விரல் வைத்து நகத்தை கடிப்பது, காதில் விரலை விட்டு ஆட்டுவது அல்லது கன்னத்தில் கை வைத்து யோசிப்பது இதுபோன்று பல்வேறு காரணங்களுக்கு கைகளை அடிக்கடி பயன்படுத்தினால், அதிலும் குறிப்பாக ஒரு மணி நேரத்தில் 20 குமதிகமான முறை பயன்படுத்தினால்  கண்டிப்பாக அவர்களுக்கு எளிதில் எந்த ஒரு நோயும் தாக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் மேக்கப்போடு வெளியில்  செல்லும் பெண்களின்  முகத்தில் கிருமிகள் அமர்ந்து மிக எளிதாக உடலுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எதிலும் கவனமாக இருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்

click me!