பிரபல நடிகர் கைது..! விருகம்பாக்கத்தில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

thenmozhi g   | Asianet News
Published : Mar 04, 2020, 06:21 PM IST
பிரபல நடிகர் கைது..! விருகம்பாக்கத்தில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

சுருக்கம்

வசந்தகாலம், தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் சூரிய பிரகாஷ். இவர் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் விஜய் ஹரிஷ். 25 வயதாகும் இவர் தற்போது 'நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

பிரபல நடிகர் கைது..! விருகம்பாக்கத்தில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

கல்லூரி மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரின் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வசந்தகாலம், தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் சூரிய பிரகாஷ். இவர் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் விஜய் ஹரிஷ். 25 வயதாகும் இவர் தற்போது 'நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் பிகாம் 2 ஆம் ஆண்டு படித்து வந்த சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியிடம் நம்பிக்கை வார்த்தை கூறி தன்னுடைய விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் காட்டி, கூப்பிடும்போதெல்லாம் வீட்டிற்கு வரவேண்டும் என மிரட்டல் விடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வரவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியும் வந்துள்ளதால் பலமுறை அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மாணவி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் நடிகர் விஜய் ஹரிஷை 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்