
எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவா..? இந்த மரத்தை நட்டு பாருங்க..அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான் ...
கணவன் மனைவி சண்டை இல்லாத வீடு இருக்கா என,ஆனாலும் எப்போதாவது சண்டை வந்தால் பராவாயில்லை...எப்போதுமே சண்டை என்றால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்....?
இதனால் குடும்ப உறுப்பினர்களும் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் அல்லவா...இதனை சரிசெய்யும் பொருட்டு அந்த காலத்திலிருந்தே ஒரு மருந்தாக உள்ளது இந்த இயற்கை கொடுத்த வெப்பாலை மரம்..
வெப்பாலை மரம்
வெப்பாலை மர நிழலில் அமரும் கணவன் மனைவிக்கிடையே உள்ள பிணக்குகள் விலகி,அவர்களின் மனம் ஒன்றிணைந்து விடுகிறதாம்
பின்பு அவர்களிடையே அன்பு அதிகமாகி,தாம்பத்ய வாழ்க்கை கூட இனிக்குமாம்..
அதாவது சண்டை சச்சரவுக்கு வாய்ப்பே இல்லாமல் போகுமாம்...அந்த அளவிற்கு வசிய குணம் கொண்டது தான் இந்த வெப்பாலை மரம் என அன்றே நம் மூத்தோர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதே போன்று இந்த மரத்தின் அனைத்து பாகமும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக தோல் வியாதிக்கு சூப்பர் மருந்து என்றே கூறலாம்.....
இந்த மரம் சாலையோரங்களில்,குறுங்காடுகள் மற்றும் மலைகளில் பரவலாகக் காணப்படும். வெப்பாலை மரத்தின் இலைகள், பூ, காய்கள், பட்டை போன்ற அனைத்து பாகங்களும், மனிதர்களுக்கு, நற்பலன்கள் தரவல்லவை.
வெப்பாலையின் குணாதிசயமாக,உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வியாதிகளையும் தணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.