கார் வாங்கணும்னா இப்பவே வாங்கிருங்க…. அதிரடி விலைக்குறைப்பை வெளியி்ட்ட மாருதி சுஸுகி நிறுவனம்

Published : Sep 25, 2019, 09:59 PM IST
கார் வாங்கணும்னா இப்பவே வாங்கிருங்க…. அதிரடி விலைக்குறைப்பை வெளியி்ட்ட மாருதி சுஸுகி நிறுவனம்

சுருக்கம்

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்ததன் பலனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது தயாரிப்புகளில் சில குறிப்பிட்ட மாடல்களுக்கு ஷோரூம் விலையில் இருந்து அதிரடியாக விலையைக் குறைத்துள்ளது  

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், ஷோரூம்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டனர், தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல், தொழிற்சாலைக்கு நிறுவனங்கள் விடுமுறை விடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

மேலும், வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் ஆட்டோமொபைல் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின.

கார் விற்பனையை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் 41.09 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 22.33 சதவீதமும் ,லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் விற்பனை 38.71 சதவீதமும் விற்பனை வீழ்ச்சி அடைந்ததது.

இதையடுத்து, சமீபத்தில் மத்தியநிதியமைச்சர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 34.94 சதவீதத்தில் இருந்து 25.17 சதவீதமாகக்குறைத்தார், அதுமட்டுமல்லாமல், ஜிஎஸ்டி வரியில் 1200 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் குறைத்தார். இந்த வரிக்குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இன்று மாருதி சுஸுகி நிறுவனம் சில குறிப்பிட்ட மாடல்களுக்கு விலையைக்குறைத்துள்ளது.

மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘வாகன விற்பனை குறைந்துள்ள நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது சிறந்த நடவடிக்கை. இதன் மூலம் மாருதி நிறுவனம் ஈட்டும் லாபத்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இதனால் பல்வேறு வகையான மாருதி கார் தயாரிப்புகளின் விலை செப்டம்பர் 25-ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது.

ஸ்விப்ட் டீசல், செலிரியோ, பாலினோ டீசல், விட்டாரா பிரீஸா, எஸ் - கிராஸ், ஆல்டோ 800, அல்டோ கே 10, டூர்-எஸ், உள்ளிட்ட கார்களின் விலை 5000 ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் அளவில் விலை குறைப்பு இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறு வனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தார். இந்த நடவடிக் கையால், சந்தையில் பட்டி யலிடப்பட்டுள்ள முன்னணி 1000 நிறுவனங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி மிச்சமாகும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Belly Fat Reduce Tips : இந்த '5' காலை பழக்கங்கள் 'தொங்கும்' தொப்பையை கூட விரைவில் குறைக்கும்
Morning Foods : தினமும் காலைல 'கண்டிப்பா' இந்த உணவுகள் சாப்பிடுறத பழக்கப்படுத்துங்க! உடல் ஆரோக்கியமா இருக்கும்