நீங்கள் சமையல் அறையில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென பாத்திரத்தில் தீ வந்தால் அச்சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாததைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் பொதுவாக அலட்சியம் காரணமாக தான் நிகழ்கின்றன. இன்னும் பெரும்பாலான விபத்துக்கள் அப்படிதான் நிகழ்கின்றன. நாம் செய்யும் சிறிய தவறுகள் தான் ஆனால் அது பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படி, சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது காண்போரை விழிப்புணர்வாக இருக்கவும், எச்சரிக்கை மற்றும் பொறுப்பாக செயல்படுவதன் அவசியத்தையும் சொல்லுகிறது.
இதையும் படிங்க: குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் இவை தான்.. எவ்வளவு தெரியுமா?
undefined
வீடியோவில்...
சமையலறை ஒன்றில் கேஸ் ஸ்டவில் சமைத்து கொண்டிருக்கிறார் செஃப். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கேஸ் ஸ்டவ் மீது வைக்கப்பட்டுள்ள கடாய் ஒன்று திடீரென தீ பற்றி எரிகிறது. இதனை கண்ட அவர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். அப்போது அவர் தண்ணீரை எடுத்து தீ மீது ஊற்றினார். இவரது இந்த செயலால் சமையலறை வெடித்தது. மேலும் அவர் சமையல் துறையில் வல்லுனராக இருந்தும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அந்த செஃப்பை சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்கள் சிறிய அறைகளை பெரிதாக்க உதவும் 6 வழிகள் இதோ..!!
பாத்திரத்தில் தீப்பற்றும் போது என்ன செய்ய வேண்டும்?
பொதுவாகவே, எண்ணெய் அல்லது கிரீஸ் போன்ற காரணத்தால் சமையலறையில் நெருப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாத்திரத்தில் தீப்பற்றும் போது முதலில் அடுப்பை அணைத்துவிட்ட வேண்டும். பின் எரிந்து கொண்டிருக்கும் அந்த பாத்திரத்தின் மீது ஏதாவது ஒரு மூடி கொண்டு மூட வேண்டும். நீங்கள் மூடும் பாத்திரம் உலோகமாக இருக்க வேண்டும். அதுபோல் மணல் அல்லது மாவு போன்ற பொருட்களை பயன்படுத்தியும் நெருப்பை அணைக்கலாம்.