
ஆண்களுக்கு ஆப்பு..! மனைவி செல்போனை தொட்டால் சிறை ....! புது சட்டம் அமல்...!
மனைவிக்கு தெரியாமல் அவர்களது செல்போனை தொட்டால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதனை மீறும் ஆண்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் எனவும் சவுதி அரசு தெரிவித்து உள்ளது.
சவுதி பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பருகிறது.
அதில் குறிப்பாக ராணுவத்தில் பெண்கள் சேரலாம் என்றும், சினிமா தியேட்டர்களில் அனுமதி, கார் ஓட்ட லைசன்ஸ் உள்ளிட்ட அனைத்தும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முதற்கட்ட சுதந்திரமாகவே பார்க்கப்பட்டது
இந்நிலையில்,எந்த ஒரு தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கும் சவுதி அரசு,தற்போது தங்கள் மனைவியின் செல்போனை எடுத்து பரிசோதிப்பது,சமூக வலைத்தளங்களில் அவர்களது ஈடுபாட்டை பார்த்து, அவர்கள் மீது சந்தேகம் கொண்டு சண்டையிடுவது எல்லாம் தண்டனைக்கு உரியதாகும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது.
அதன்படி,
இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும், 1,33,000 டாலர் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சமீப காலமாக,மொபைல் போன் சம்மந்தமாக தான் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைப்பெற்று உள்ளதாகவும்,அதனால் தான் இந்த புது திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்து உள்ளார்
மேலும் பெண்களுக்கு சுதந்திரம் தேவை என்றும்,அதே சமயத்தில் ஆண்களின் இது போன்ற தவறான எண்ணங்களில் மாற்றாம் வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார் இளவரசர்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.