மூன்றரை அடி உயரம் தான்..! மக்கள் பணியில் பின்னி பெடலெடுக்கும் லேடி சூப்பர் கலெக்டர்..!

By ezhil mozhiFirst Published Sep 6, 2019, 4:34 PM IST
Highlights

ஜோத்பூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் தான் ஆர்த்தி டோக்ரா. சட்டத்திற்கு மாறாக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார். ஜோத்பூர் ஆட்சியராக இருந்தபோது எந்த ஒரு பெரும் குற்றங்கள் நடக்காமல் சிறப்பாக ஆட்சி செய்தவர். 

வெறும் மூன்றரை அடி உயரம் கொண்ட ஆட்சியர்..! மக்கள் பணியில் பின்னி பெடலெடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்..! 

3 அடி உயரம் மட்டுமே கொண்ட மாவட்ட ஆட்சியரான ஆர்த்தி டோக்ரா அவர்களின் பல்வேறு சாதனைகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஜோத்பூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் தான் ஆர்த்தி டோக்ரா. சட்டத்திற்கு மாறாக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார். ஜோத்பூர் ஆட்சியராக இருந்தபோது எந்த ஒரு பெரும் குற்றங்கள் நடக்காமல் சிறப்பாக ஆட்சி செய்தவர். பின்னர் அஜ்மீர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனை அறிந்த ஜோத்பூர் மாவட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரை இடம்  மாற்றம் செய்யக்கூடாது என போராடினர். இருந்தாலும் மக்களை சமாதானம் படுத்தி அஜ்மீருக்கு சென்றார்.  

இவரின்  தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர்.தாயார் ஓர் ஆசிரியை. 1979ஆம் ஆண்டு பிறந்த  ஆர்த்தி வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்தார்.  வெறும் மூன்றரை அடி உயரம் மட்டுமே கொண்டவர் ஆர்த்தி. டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பொருளியல் படிப்பை படித்துவிட்டு தன்னுடைய முதுகலைப் படிப்பை டேராடூன் சென்று பயின்றார். அப்போது தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். அங்கு ஐஏஎஸ் அதிகாரி மனிஷா என்பவரை சந்தித்தார்.

ஆர்த்தியம் மனிஷாவும் நன்றாக பேசி பழகி உள்ளனர். ஆர்த்தியின் திறமையை நன்றாக புரிந்து கொண்ட மனிஷா நீங்கள் ஏன் ஐஏஎஸ் ஆகக்கூடாது? என கேள்வி கேட்கவே, அந்த ஆசையும் நம்பிக்கையும் ஆர்த்தியிடம் பற்றிக்கொண்டது. பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி முதல் முறையிலேயே தேர்வாகி ஆட்சியரானார். 

2013ஆம் ஆண்டு அஜ்மீர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அந்த மாவட்டத்தில் சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். காரணம் பொது வெளியில் மலம் கழிக்கும் வழக்கம் கொண்ட கிராமங்கள் நிறைந்த ஓர் மாவட்டம் என்றால் அது அஜ்மீர் தான். எனவே இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி புக்கா டாய்லெட் எனப்படும் ஒரு விதமான கழிவறையை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு வழி வகை செய்தார். இந்த முறையில் 800 கழிவறை கட்டிக் கொடுத்துள்ளார்.

பின்னர்தான் புக்கா "டாய்லெட்" இந்திய அளவில் அனைவரின் கவனத்திற்கு சென்றது. தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து கூட புக்கா டாய்லெட் முறை பற்றி தெரிந்து கொண்டு அந்த நாடுகளிலும் இந்த முறையை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் பாருங்களேன்..! திறமைக்கு எங்கும் எப்போதும் அங்கீகாரம் உள்ளது...! 

click me!