"மாஸ்க்" அணிய மாட்டேன்! ஆச்சர்ய காரணத்தை வெளியிட்ட "டிரம்ப்"..!

By ezhil mozhiFirst Published Apr 4, 2020, 2:19 PM IST
Highlights

மாஸ்க் அணிவது மிக மிக முக்கியம் என ஆய்வு தெரிவிக்கின்றது. இப்படி ஒரு நிலையில் சமூக விலகளும்,  மாஸ்க் அணிவதும் மிக முக்கியம் என உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தான் மாஸ்க் அணிய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

"மாஸ்க்" அணிய மாட்டேன்! ஆச்சர்ய காரணத்தை வெளியிட்ட "டிரம்ப்"..!

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் முக கவசம், கையுறை அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தான் முக கவசம் அணிய போவதில்லை என தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. இங்கு மட்டும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7402 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஒரு நிலையில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. எனவே உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாஸ்க் அணிவது மிக மிக முக்கியம் என ஆய்வு தெரிவிக்கின்றது. இப்படி ஒரு நிலையில் சமூக விலகளும்,  மாஸ்க் அணிவதும் மிக முக்கியம் என உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தான் மாஸ்க் அணிய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், "தனது அலுவலகத்திற்கு வருகை புரியும் அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசிகள், இளவரசர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் வருகை தரும் போது என்னால் மாஸ்க் அணிந்து அவர்களை வரவேற்க முடியாது. எனவே மாஸ்க் அணிய போவதில்லை" என குறிப்பிட்டு உள்ளார்

 மாஸ்க் அணிந்து ஒருவரை வரவேற்பது அவ்வளவு சரியாகபட வில்லையாம்  அமெரிக்க அதிபருக்கு. அதே  வேளையில் சமுக விலகலும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி இருந்தும் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா.

click me!