நீதிபதி விசாரிக்கும் போதே மனைவியை கத்தியால் குத்திய கணவன்..! சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு ..!

Published : Mar 19, 2019, 03:30 PM IST
நீதிபதி விசாரிக்கும் போதே மனைவியை கத்தியால் குத்திய கணவன்..!  சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு ..!

சுருக்கம்

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவனை போலீசார் கையும் களவுமாக வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவனை போலீசார் கையும் களவுமாக வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. கருத்து வேறுபாடு விவாகரத்து கோரி வரலட்சுமி மற்றும் சரவணன் தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அப்போது தன் மனைவி மீது கருத்து வேறுபாடு காரணமாக மிகுந்த கோபத்துடன் இருந்த சரவணன் நீதிமன்ற வளாகத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சரவணனை பாதுகாப்பு போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரை கைது செய்த போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஒரு நீதிபதியின் கண்முன்னே நீதிமன்ற வளாகத்திலேயே தன் மனைவியை கத்தியால் குத்திய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்