யார்... எந்த பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..? முக சருமம் கெட்டுப்போக இதுதான் காரணம்..!

By ezhil mozhiFirst Published Nov 11, 2019, 5:32 PM IST
Highlights

பருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம்  சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

யார்... எந்த பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..? முக சருமம் கெட்டுப்போக இதுதான் காரணம்..! 

நம் முகம் மென்மையான சருமம் கொண்டதால் முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சோப்பு மிகவும் மிருதுவான தன்மையை கொடுப்பதாக இருக்கவேண்டும். ஒருசிலர் உடம்புக்கு பயன்படுத்தப்படும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் வறண்டு ஒருவிதமான வறட்சியை ஏற்படுத்திவிடும்.

ஆனால் எப்போதும் முகப் பொலிவுடனும் முக சருமத்தை மென்மையாக பாதுகாக்க சருமத்தை பொறுத்து பல்வேறு வகையான ஃபேஸ் வாஷ் வந்துள்ளது. அதன்படி எண்ணெய் பசை அதிகம் கொண்ட சருமத்திற்கு ஆயில் பிரீ ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் .

பருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

சுருக்கங்களை தவிர்க்க ஆன்டி-ஏஜிங் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வயிட்னிங் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். இதுபோன்று ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது முதலில் தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, பின்னர் தேவையான அளவிற்கு பேஸ் வாஸ் சொலுஷன்  எடுத்துக்கொண்டு முகத்தில் மெதுவாக கீழிருந்து மேல் புறமாக மசாஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.

காலையில் வெளியில் செல்லும்போதும், அதேபோன்று இரவு வீடு திரும்பிய பின் உறங்கும்போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் மென்மையாகவும் இளமையான தோற்றத்தை கொடுப்பதாகவும் இருக்கும் 

click me!