உடல் எடையை மட்டும் குறைக்கணும் ... ஆனால் ஒரு வாரம் கூடவா இதை பண்ண மாட்டீங்க...!

By ezhil mozhiFirst Published Dec 7, 2019, 6:07 PM IST
Highlights

நூறு கிராம் குடை மிளகாயில் 31 கலோரி மட்டுமே உள்ளது. எனவே இந்த உணவு வகைகளை பயன்படுத்தி தினமும் இதனை உண்டு வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை நன்கு குறைவதை காணலாம்.

உடல் எடையை மட்டும் குறைக்கணும் ... ஆனால் ஒரு வாரம் கூடவா இதை பண்ண மாட்டீங்க...! 

நம்மில் எத்தனையோ பேர் அதிக உடல் எடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களால் தங்கள் வேலையை கூட சரிவர செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும், சரியான நேரத்தில் நாம் சாப்பிடாமல் இருந்தாலும், உடல் எடை கூட தான் செய்யும். இது குறித்து விளக்கமாக பார்க்கலாமா வாங்க.   

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதிக கலோரி உடைய உணவை உண்பதால் தான் உடல் எடையும் அதிகரித்து வருகிறது. உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் எளிதில் வரும் வாய்ப்பு உள்ளது.

சரி வாங்க மிக குறைவான கலோரி உள்ள சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

ஒரு முழுமையான பர்க்கோளில் 34 கலோரி மட்டுமே உள்ளது. 

காளிஃபிளவரில்  24 கலோரி மட்டுமே  உள்ளது. 

வெள்ளரிக்காயில் 22 கலோரி மட்டுமே  உள்ளது. 

காளான்களில்  2 கலோரி மட்டுமே உள்ளது. 

பாப்கார்ன் சாதாரண ஒரு பாக்கெட்டில் 32 கலோரி மட்டுமே உள்ளது. 

நூறு கிராம் குடை மிளகாயில் 31 கலோரி மட்டுமே உள்ளது. எனவே இந்த உணவு வகைகளை பயன்படுத்தி தினமும் இதனை உண்டு வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை நன்கு குறைவதை காணலாம்.

இவ்வாறு குறைந்த அளவு கலோரி கொண்ட உணவாயு பொருட்களை தேர்வு செய்து உண்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் ஏற்கனவே இருக்கும் உடல் எடையில் இருந்து கூடாமல் மெல்ல மெல்ல குறைவதை காணலாம். 

click me!