உடல் எடை குறைய தினமும் "15 நிமிடம்" செலவிட்டால் போதும் ..! சூப்பர் ட்ரிக்ஸ் இதோ..!

By ezhil mozhiFirst Published Apr 8, 2020, 3:43 PM IST
Highlights

"உடல் பருமன்’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், எடை குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 பேர் ஆறு மாதங்களுக்கு அவர்கள் சாப்பிட்டதைக் கண்காணித்தனர். முடிவில், அதிக எடையை இழந்தவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்குள் தங்கள் உட்கொள்ளலை பதிவு செய்துள்ளனர் 
 

உடல் எடை குறைய தினமும் "15 நிமிடம்" செலவிட்டால் போதும் ..! சூப்பர் ட்ரிக்ஸ் இதோ..!

எடை இழப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் பல ஒர்க்அவுட் விஷயங்கள் இருந்தாலும் எது நமக்கு நல்ல தீர்வை கொடுக்கும் என்பது தான் முக்கியம். 

அதில் மிக முக்கியமாக பகலில் நீங்கள் சாப்பிடுவதை பதிவு செய்யுங்கள். அதாவது பகலில் நீங்கள் உண்ணும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பது உண்மையில் எடை குறைக்க உதவும்.

"உடல் பருமன்’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், எடை குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 பேர் ஆறு மாதங்களுக்கு அவர்கள் சாப்பிட்டதைக் கண்காணித்தனர். முடிவில், அதிக எடையை இழந்தவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்குள் தங்கள் உட்கொள்ளலை பதிவு செய்துள்ளனர். 

வெர்மான்ட் பல்கலைக்கழகம் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மற்றொரு ஆய்வில், உடல் எடையில் 10% இழந்தவர்கள், முதல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 23.2 நிமிடங்கள் தங்கள் உட்கொள்ளலை பதிவு செய்துள்ளனர் 

அதில், "அவர்கள் உட்கொண்ட அனைத்து உணவுகள் மற்றும் பானங்களுக்கான கலோரிகளையும் கொழுப்பையும் பதிவுசெய்தல், அளவுகள் மற்றும் தயாரிப்பு முறைகள்" என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தை பதிவு செய்ய ஆரம்பித்ததும், நீங்கள் உணர்வுடன் சாப்பிடத் தொடங்குவீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவை நீங்கள் தவிர்ப்பீர்கள். இந்த பழக்கத்தை செயல்படுத்துவதன் மூலம், நாள் முழுவதும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் தேவையில்லாத உணவு பழக்க வழங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது... என்னவென்றால், ஒரு நாளில் 15 நிமிடங்கள் செலவு செய்யுங்கள். அதற்காக  காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பிறகு 5 நிமிடங்கள் செலவு செய்து எழுதி வையுங்கள். இதனுடன் உங்கள் அன்றாட வழக்கத்தில் 30 நிமிட உடற்பயிற்சியையும் நீங்கள் சேர்க்க வேண்டும், இது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். 

click me!