டெங்கு வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய டிப்ஸ் இதோ..!

By ezhil mozhiFirst Published Jan 28, 2019, 8:23 PM IST
Highlights

கொசுக்கடியால் வரும் டெங்கு எந்த அளவிற்கு நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இதற்கு முன்னதாக பல்வேறு பதிவில் பார்த்து இருந்தோம். 

டெங்கு வராமல் தடுக்க  மேற்கொள்ள வேண்டிய டிப்ஸ் இதோ..! 

கொசுக்கடியால் வரும் டெங்கு எந்த அளவிற்கு நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இதற்கு முன்னதாக பல்வேறு பதிவில் பார்த்து இருந்தோம். கொசுவை வராமல் தடுப்பது எப்படினு பார்க்கலாம்.வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

மாலை நேரத்தில் கதவு ஜன்னலை மூடி வைக்க வேண்டும்.

அழுக்கு ஆடைகளை சேர்த்து வைக்க கூடாது.

கிச்சனை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. 

முழு கை அளவு உள்ள ஆடையை அணியலாம்.

தினமும் மாலை சாம்பிராணி புகையை வீட்டிற்குள் காண்பிக்கலாம்.

கால்முட்டி கீழ் வரை  தேங்காய் எண்ணெய் தடவி விடுவது நல்லது. ஏனென்றால் இந்த கொசுவால் அதிக மேல்நோக்கி பறக்க இயலாது. எனவே முட்டி அளவு தூரம் வரை மட்டுமே பறக்கும் என்பதால், காலில் உள்ள எண்ணெய் பசையால் கடிக்காது. தேங்காய் ஓட்டையோ அல்லது பழைய பக்கெட் மற்றும் பூச்சட்டியில் தண்ணீர் தேங்க வைத்து இருந்தாலோ கொசு உருவாகும். எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இரவு உறங்கும் போது கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க  வேண்டும். இது போன்ற சில டிப்ஸ் பாலோ பண்ணி வந்தால், கொசுக்களின் தொல்லையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். டெங்குவிலிருந்து விடுபடலாம்

இதனையும் மீறி கொசு தொல்லை இருந்தால், கொசு வலையை பயன்படுத்துவது நல்லது. கூடுதலாக குட் நைட் பயன்படுத்தி உறங்கலாம். இதெல்லாம் மீறி, எப்படியோ டெங்குவால் பாதிக்கப் பட்டால் முதலில் ரத்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து, எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
 

click me!