
எப்போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு பால் அல்வா பால் சார்ந்த உண்பண்டங்கள் பொதுவாகவே அனைவரும் மிகவும் ரசித்து ருசித்து உண்பார்கள்.
மேலும், வார இறுதி நாட்களில் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது நம் வீட்டிற்கு யாராவது உறவுகள் வந்தாலும் அவர்களுக்கு இதனை செய்துக்கொடுக்கலாம்.
வாங்க பால் அல்வாவை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையானவை
காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், அதனை தொடர்ந்து கிளறி வர வேண்டும்
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.
வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து கொடுத்தால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.