மேடைப் பேச்சு என்பது பலருக்கும் ஒருவித பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஒரு விஷயம். இந்த பயத்தை சமாளித்து நம்பிக்கையுடன் மேடையில் பேச சில எளிய வழிகள் உள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் ஒரு சிறந்த மேடை பேச்சாளராக முன்னேறலாம்.
மேடை பேச்சு என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மேடையில் பேச வேண்டும் என்றால் பலருக்கும் பயம் வந்துவிடும். மேடையில் பேசுவதற்கான பயம் கவலையின் பொதுவான வடிவமாகும். லேசான பதட்டம் முதல் பயம் மற்றும் பீதியை முடக்கும் வரை இருக்கலாம். இந்த பயம் கொண்ட பலர் மேடையில் பேசும் சூழ்நிலைகளை முற்றிலுமாக தவிர்க்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மேடையில் எந்த பயமும் பதட்டமும் இன்றி பேச மாணவர்களுக்கு உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
உங்கள் தலைப்பை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதைப் பற்றி பேசப் போகிறீர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டாலே, நீங்கள் தவறு செய்யும் அல்லது தடம் புரளும் வாய்ப்பு குறைவு. ஒருவேளை நீங்கள் தவறு செய்தாலும் விரைவில் மீண்டு வர முடியும். பார்வையாளர்கள் என்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும், உங்கள் பதில்களைத் தயாராக வைத்திருக்கவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
undefined
மேடைப் பேச்சுக்கு முன்னதாகவே பயிற்சி எடுப்பது அவசியம். நீங்கள் பேசும் போது நீங்கள் வழங்க விரும்பும் தகவலை கவனமாக திட்டமிடுங்கள். கண்ணாடி முன்பு நின்று ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் பேசி கூட பயிற்சி செய்யலாம். இப்படி பேசி பயிற்சி எடுக்கும் போது நீங்கள் என்னென்ன தவறு செய்கிறீர்கள் என்பது தெரியும். அதை திருத்திக் கொண்டு மேடைகளில் பேசலாம்.
மேடையில் இருக்கும் பார்வையாளர்களை பார்த்தால் பலரும் பயப்படலாம். உங்கள் பேச்சு மறக்க நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள் என்று பட்டியலிட்டு, அதன்பின்னர், அதற்கான மாற்று விளைவுகளை அடையாளம் காண வேண்டும். எனவே உங்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டியது.
உங்கள் மேடைப்பேச்சு நன்றாக இருக்கும் என்றும், உங்களுக்கு பார்வையாலர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு குறித்தும் கற்பனை செய்து பாருங்கள். எப்போதுமே நேர்மறையான எண்ணங்களை வைத்திருங்கள். இது உங்கள் எதிர்மறையான சிலவற்றைக் குறைக்கவும், சில கவலைகளைப் போக்கவும் உதவும்.
நீங்கள் மேடைக்கு செல்லும் முன்பு ஆழ்ந்த சுவாசம் எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் பேசுவதற்கு முன்பும் உங்கள் பேச்சின் போதும் ஆழமாக சுவாசிப்பது உங்கள் பதற்றத்தை குறைத்து அமைதியாக்க உதவும். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மக்கள் முக்கியமாக புதிய தகவல்களுக்கு கவனம் செலுத்துகிறார்கள். எனவே நீங்கள் பேசும் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
நீங்கள் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென மறந்துவிட்டால் அல்லது நீங்கள் சொல்வதை தவறவிட்டால் பயப்பட வேண்டாம். நீங்கள் பதட்டமாக உணர ஆரம்பித்தால், நீங்கள் அடுத்தடுத்து பேச வேண்டிய விஷயங்களும் மறந்துவிடும். எனவே ஓரிரு நொடிகள் ஆழ்ந்த சுவாசம் எடுத்து பதற்றத்தை குறைத்து மீண்டும் பேச தொடங்குங்கள். பேசும் போது தவறு செய்தாலும், அதை நினைத்து கவலைப்பட வேண்டும். ஏனெனில் எல்லோரும் தவறு செய்கிறார்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அதை பார்க்க வேண்டும்.
எந்த ஒரு மேடைப்பேச்சை முடித்த பின்னரும், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது. மேடையில் பேசி முடித்த பிறகு, அதில் என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும் என்று சிந்திப்பது முக்கியம். மேலும் நீங்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு உங்கள் பேச்சை மேலும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.