‘ஆள் பாதி ஆடை பாதி’அல்லவா. அப்படி பார்த்து, பார்த்து உடையை தேர்வு செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை.
இன்றைய நவீன உலகில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றையும் ஆன்லைன்னில் பதிவிடுவது ட்ரெண்ட் ஆகிவிட்டது. தற்போது, ஒமிக்ரான் என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் வேலை ஆட்களை ''Work from home''மூலம் வீட்டில் இருந்து பணி அமர்த்தி, அதிக லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இன்றைய பெரும்பாலான முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெறுகின்றது.
இதுபோன்ற சூழலில், பெரும்பாலான இன்டெர்வியூகள் ஆன்லைனில் நடப்பதால், நாம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்? எப்படி உடை அணிந்து கொள்ளவது? என்பவற்றை தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், ‘ஆள் பாதி ஆடை பாதி’அல்லவா. அப்படி பார்த்து, பார்த்து உடையை தேர்வு செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை.
உடையின் கலரினை தேர்வு செய்வதில் கவனம்:
பொதுவாக எல்லா விதமான இன்டெர்வியூக்கும் உடையின் கலர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அவை தான் உங்களிடம் இன்டெர்வியூ எடுப்போருக்கு உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும்.
குறிப்பாக, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் மென்மையான வெளிர் நிறங்களில் உடைகளைத் தேர்வு செய்வது பார்ப்பவருக்கு பிரகாசமாகத் தோன்றும்.
உடையில் கவனம் வேண்டும்:
இன்டெர்வியூ செல்லும், பெண்கள் அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடையில் உள்ள நூல் அளவிலான மெல்லி கோட்டை தாண்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இது பணி செய்யும் இடத்தில் நமது கண்ணியத்தை பாதிப்பதோடு, தேவையில்லாத தொல்லைகள் மற்றும் கவன ஈர்ப்பை கொண்டு வரும். இது நம்முடைய பணிச்சூழல் மற்றும் வேலையில் முழு கவனம் செலுத்துவதை சிதைக்கலாம்.
உடையின் கழுத்துப்பட்டை முக்கியமானது:
பொதுவாக ஜூம் இன்டெர்வியூக்கு உங்கள் உடலின் மேல் புறம் மட்டுமே தெரியும் என்பதால், நீங்கள் அணிய தேர்வு செய்யும் ஆடையின் கழுத்துப்பட்டை மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு உயர் கழுத்து ஒரு வட்டக் கழுத்து அல்லது ஆடை குறைப்பு என்பது சில சமயங்களில் உங்களைச் சற்று தடுமாறச் செய்யலாம். அதற்குப் பதிலாக நீங்கள் வி-நெக் டீ-ஷர்ட் அல்லது டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். காலர் சட்டையில் பட்டன் அவிழ்க்கப்படாது இருப்பது நல்லது.
நேர்த்தியான டாப் மற்றும் ப்ளவுஸ்:
போல் மொராக்கன் டாப், டியுனிக், குர்த்திகள் என விதவிதமான டாப்களை வாங்கிக் கொள்வது நல்லது. வெள்ளை, கருப்பு, நீலம் மற்றும் வெளிர் வண்ணங்கள் அனைத்து நாட்களுக்கும் ஏற்ற நேர்த்தியான லுக்கை கொடுக்கும். ஜூம் இன்டெர்வியூக்கு பெண்கள், தாங்கள் அணியும் பேண்ட் அல்லது லெக்கின்ஸ், ஜுன்ஸுக்கு ஏற்றார் போல், ஷார்ட் அல்லது லாங் டைப் டாப்களை அணியலாம். அதிக சிரமமில்லாத, அணிந்து கொள்ளவும் வசதியான ஆடைகளை அணிவதும் நல்லது.
பிளேஸர் உடை:
உடை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலான நிறுவனங்களில் நேரடி இன்டெர்வியூ செல்பவர்கள் பிளேஸர் (blazers) உடை அணிவது வழக்கம். ஆனால், ஜூம் இன்டெர்வியூவில் அதுபோன்ற ஆடை அணிவது குறைவு.
பட்டன் சட்டைகள்:
எப்போதுமே மீட்டிங்கிற்கு பட்டனுடன் கூடிய சட்டைகளை நீங்கள் நம்பி தேர்வு செய்யலாம். அது ஒரு இன்டர்வியூவாக இருந்தாலும் சரி, இல்லை உங்களது அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்காக இருந்தாலும் சரி, டார்க் கலர் பாட்டமுடன் கண்களை உறுத்தாத மெல்லிய நிற சட்டையை முயற்சித்து பாருங்கள்.
ஜூம் இன்டெர்வியூ ஆரம்பிக்கும் முன்பு, துணிகளைச் சுத்தம்செய்து மென்மையாக்குங்கள், அதில் அனைத்து பொத்தான்களும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், கறை, தையல் கிழிந்த மற்றும் சுருக்கங்கள் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். குறிப்பாக, ஆடைகளின் கீழ் இருந்து உள்ளாடைகள் காணப்படக்கூடாது. எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இன்டெர்வியூவில் நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!