வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் தெரிந்தால் இனி, யாரும் வெண்டைக்காயை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். வெண்டைக்காயின் வழவழப்பு தன்மை கருதி சிலர் அதை விரும்பமாட்டார்கள். அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். ஆனால், பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். குறிப்பாக, சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திற்கு உதவுகிறது.
undefined
வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழிகள்:
நீங்கள் வெண்டைக்காயை சேர்த்து செய்யக்கூடிய பல உணவுகள் உள்ளன. வெண்டைக்காயை தனியாகவோ அல்லது வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.வெண்டைக்காய் தோலை அரைத்து அப்படியே உட்கொள்ளலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், ஆஸ்துமா கோளாறு சரியாகும்.
பொடி செய்யப்பட்ட வெண்டைக்காய் விதைகளை எடுத்து அல்லது விதைகளை அரைக்கும் முன் உலர்த்தி பயன்படுத்தலாம். பொடி செய்யப்பட்ட வெண்டைக்காய் விதைகள் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் ஒரு துணைப் பொருளாகக் கூறப்படுகிறது.
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும். முற்றிய வெண்டைக்காய் மூன்று, ஒரு தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:
வெண்டைக்காய் வைட்டமின் Cக்கு சிறந்த ஆதரமாக உள்ளது. வைட்டமின் C நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து. ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது. இது இரத்த உறைதலில் பங்களிப்புக்காக அறியப்படுகிறது.
வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்துக் குடித்தால் இருமல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் சரியாகும்.
வெண்டைக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. சிறிது புரதமும் நார்ச்சத்தும் உள்ளது. பல பழங்களிலும் காய்கறிகளில் புரதம் இல்லை. அதனாலேயே, வெண்டைக்காய் ஓரளவு தனித்துவமானதாக உள்ளது.
மேலும், வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும். மலச்சிக்கலும் தீரும். வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வை மேம்படும்.