டெங்கு வராமல் தடுக்க உடனே இதை செய்யுங்க..! அதுதான் நல்லது..!

By ezhil mozhiFirst Published Aug 19, 2019, 7:50 PM IST
Highlights

மழைக்காலம் தொடங்கும் போது, கொசுக்கள் முட்டையிட்டு, அதிலிருந்து அதன் இனத்தை விருத்தி அடைய செய்கிறது. பெருகி வரும் இந்த கொசுக்களால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருகிறது

டெங்கு வராமல் தடுக்க உடனே இதை செய்யுங்க..! அதுதான் நல்லது..! 

டெங்கு 

சென்ற ஆண்டு தமிழகத்தையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம் டெங்கு என்று சொல்லலாம். கொசுக்கள் மூலம் வரக்கூடிய இந்த டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் அதிக அளவில் எளிதில் பாதிக்கின்றனர்

மழைக்காலம் தொடங்கும் போது, கொசுக்கள் முட்டையிட்டு, அதிலிருந்து அதன் இனத்தை விருத்தி அடைய செய்கிறது. பெருகி வரும் இந்த கொசுக்களால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருகிறது

அறிகுறிகள்

தலை வலி, குமட்டல் வாந்தி, கண்ணனுக்கு பின்புறம் வலி, பசியின்மை தொண்டைப்புண், அரிப்பு ஏற்படும், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும்

காய்ச்சல் வந்தால் ..?

எந்த ஒரு காய்ச்சலாக இருந்தாலும், அதனுடன் வாந்தி குமட்டல், தலைவலி என இருக்கும் போது சாதாரண காய்ச்சல் என எண்ணி மருத்துவரிடம் செல்லாமல் இருக்க கூடாது. மருத்துவரை அணுகி உடனடியாக தேவையான சிகிச்சை பெறுவது நல்லது

இந்த சமயத்தில் உடலில் தேவையான அளவிற்கு தண்ணீர் சத்து இருக்க வேண்டும். இது போன்ற சமயத்தில் அதிக தண்ணீர் மற்றும் ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான தண்ணீரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது

பெரியவர்களும் காய்ச்சல் இருக்கும் போது உடலில் நீர் சத்து குறையாமால் பார்த்துக்கொள்ள வேண்டும்

காய்ச்சலை வராமல் தடுப்பது எப்படி ..?

கொசு கடியிலிருந்து பாதுக்காத்துக்கொள்ள கொசு வலைகளை கட்டாயம் பயன்படுத்த  வேண்டும்...

வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வெளியில் விளையாட செல்லும் போது உடல் முழுதும் கவர் செய்தவாறு உள்ள ஆடைகளை அணிய செய்ய வேண்டும்.

மாலை நேரத்தில், குறிப்பாக 4  மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் கதவை மூடி இருக்க வேண்டும்.

நொச்சித்தழை கொண்டு புகை ஏற்படுத்தலாம்.

இது போன்று செய்து வருவதால், கொசு கடியிலிருந்து  தம்மை பாதுகாத்து  டெங்கு பீவரிலிருந்து விடுபடலாம்.

அப்போது மழையும் பரவலாக இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து உள்ளது. அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வது

click me!