மறந்து கூட விளக்கு ஏற்றிய உடனே இந்த தவறை செய்யாதீங்க..!

By ezhil mozhiFirst Published Aug 19, 2019, 6:38 PM IST
Highlights

நம் முன்னோர்கள் தெரிவிக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக ஒரு நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. 

மறந்து கூட விளக்கு ஏற்றிய உடனே இந்த தவறை செய்யாதீங்க..! 

நம் முன்னோர்கள் தெரிவிக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக ஒரு நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில், விளக்கு ஏற்றியவுடன் வீட்டை பெருக்க கூடாது என  நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளதை நாம் கேள்வி பட்டிருப்போம். அது ஏன் என்றால், அக்காலத்தில் மின்சாரம் இல்லை சிறு அகல் விளக்கு மட்டுமே... வெளிச்சம் பெரியதாக இருக்காது.

அந்த சமயத்தில் நாம் பயன்படுத்திய பொருட்கள் அதாவது உதாரணத்திற்கு விலை உயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள் ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, அதனை கூட்டி பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து குப்பையில் கொட்டி விடுவோம் அல்லவா..? பின்பு எப்படி விலை உயர்ந்த தங்கத்திலான பொருட்களோ அல்லது வேறு சிறிய பொருட்களையோ மீண்டும் பெற முடியும். 

இதனையெல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படும். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என நம் முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். இதனை தான், விளக்கு வைத்த உடன் வீடு கூட்டி பெருக்கினால் மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாம் பொன்னும் பொருளையும் தானே மகா லட்சுமி என்கிறோம்..அதனால் தான் மாலை நேரத்தில் விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து விட கூடாது என்பதற்காக விளக்கு  ஏற்றியவுடன் வீட்டை பெருக்க கூடாது என சொல்லி உள்ளனர். 

click me!