பொடுகு தொல்லை தீர இப்பவே இதை செய்யுங்கள்....! இதற்கு போய் கவலை படலாமா..?

By thenmozhi gFirst Published Dec 11, 2018, 1:55 PM IST
Highlights

தேங்காய்ப்பால் அரை கப் எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி, ஊற வைத்து அரைத்த வெந்தையம் இவற்றை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்

தேங்காய்ப்பால் அரை கப் எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி, ஊற வைத்து அரைத்த வெந்தையம் இவற்றை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.

கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை பழச்சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் மாதிரி செய்துக்கொண்டு பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன், அரை கப் தண்ணீர் கலந்து, தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மிளகு எண்ணெய், தயிர் செம்பருத்தி பூ இவற்றை கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும்.

வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணையில் நன்றாக கருக வறுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.முல்தானிமட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். தலையில் தயிர் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு குளிக்க பொடுகு நீங்கும்.

பொடுகு தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள், குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. வசம்பு சாறு, பொடுதலை சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.

பொடுதலையை பொடுகு உள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் தான் இதற்கு பொடுதலை என பெயர் வந்தது. நாட்டு வெங்காயத்தை உரித்து, அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்தால் பொடுகு நீங்கும். 

வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணையில் காய்ச்சி வடிக்கட்டி அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். வெள்ளை மிளகு நான்கு தேக்கரண்டி, வெந்தயம் இரண்டு தேக்கரண்டி, இரண்டையும் காய்ச்சாத பசும்பலில் அரைத்து தாளிக்கு பேக்போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும் 

தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும் .பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கன்டிஷினராகவும் பயன்படும் மேல் குறிப்பிட்டு உள்ள பல டிப்ஸ்ல உங்களுக்கு பிடித்த டிப்ஸ் எதையோ அதனை கொண்டு முயற்சி செய்து பாருங்க.. கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். 
 

click me!