Goat Boti Cleaning Tips :ஆட்டுக்குடலை சுத்தம் செய்யுறப்ப 'இதை' செய்ய மறக்க வேண்டாம்! சூப்பரான டெக்னிக் இதுதான்!

Published : Dec 27, 2025, 01:48 PM IST
mutton intestine

சுருக்கம்

ஆட்டுக்குடலை ரொம்பவும் ஈஸியாக சுத்தம் பண்ணுவது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.

அசைவ பிரியர்கள் நிறைய பேருக்கு ஆட்டுக்குடல் கறி ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வதென்று தெரியாமல் வாங்க மாட்டார்கள். கடையில் வாங்கி சாப்பிட்டாலும், அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும். உங்களுக்கும் ஆட்டுக்குடலை சுத்தம் பண்ணுவது எப்படி என்று தெரியவில்லையா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. ஆட்டுக்குடலே ரொம்பவே சுத்தமாக சுத்தம் பண்ணுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

ஆட்டுக்குடல் வகைகள் :

ஆட்டுக்குடலில் மூன்று விதங்கள் இருக்கும். ஒன்று பை போல போர்த்தியிருக்கும். மற்றவை அதன் உள்ளுக்குள் இருக்கும் சிறு குடல் மற்றும் பெருங்குடல் இரண்டு குரல்களும் இருக்கும். கறிக்கடைகளில் இந்த மூன்றையும் தனித்தனியாக விற்பனை செய்வார்கள். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாக வாங்கி சமைத்தால் சுவையாக இருக்கும்.

ஆட்டுக்குடலை சுத்தம் செய்வது எப்படி?

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வாங்கிட்டு வந்த குடலை போட்டு, பைப் தண்ணீரை திறந்து விட்டு ஓடும் நேரில் சுமார் 4-5 முறை நன்கு அலச வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் 10 நிமிடங்கள் அப்படியே போட்டு வைக்கவும். இப்படி செய்தால் அதில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும்.

குடல் பை தோலை சுத்தம் செய்யும் முறை :

இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருக்கும் சுடுத் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த குடல் பையை போட்டு 15 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு அதை எடுத்து கை, கத்தி அல்லது கரண்டியால் மேலே இருக்கும் கருப்பு நிற தோலை நன்கு உரித்தெடுக்கவும். இப்படி செய்தால் முற்றிலும் சுத்தமாகி வெள்ளையாக இருக்கும்.

பெருங்குடலை சுத்தம் செய்யும் முறை :

பெருங்குடலை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு கத்தரிக்கோலை எடுத்து பெருங்குடலை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை பிரித்து இரண்டு புறமும் நன்றாக கழுவ வேண்டும்.

சிறுகுடலை சுத்தம் செய்யும் முறை :

சிறுகுடலை சுத்தம் செய்வது சிரமமாக தான் இருக்கும். ஏனெனில் அதன் ஓட்டை ரொம்பவே சின்னதாக இருக்கும். சிறுகுடலை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு குச்சி அல்லது சாப்ஸ்டிகை பை சிறுகுடலுக்குள் விட்டு பின் மேல்புறமாக இழுக்கவும். இப்படி செய்தால் அதனுள் இருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியே வந்து விடும். பிறகு எப்போதும் போல தண்ணீரில் அலசவும்.

குடலை நன்கு சுத்தம் செய்து பிறகு நீங்கள் விரும்பிய சைஸில் அதை நறுக்கிக் கொள்ளவும். பிறகு மீண்டும் தண்ணீரில் 2-3 முறை குடலை கழுவவும். இப்போது குடல் முழுமையாக சுத்தமாக இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Diabetes and Heart Disease : சர்க்கரை நோயாளிகளே! இதய நோய் வராமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க
இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!