Ceiling Fan: ஏணி தேவையில்லை! தரையில் நின்றபடியே ஃபேன் சுத்தம் செய்ய சூப்பர் டெக்னிக் இதோ!

Published : Sep 04, 2026, 08:13 PM IST
Ceiling Fan

சுருக்கம்

Ceiling Fan: ஃபேன் சுத்தம் செய்ய ஏணி ஏறி சிரமப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் தலையணை உறை, வேக்யூம் கிளீனர் போன்ற எளிய பொருட்களைக் கொண்டு தரையில் நின்றபடியே பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி என பார்ப்போம்.

வீட்டில் சுழலும் ஃபேன் இறக்கைகளில் தூசி படிவது சகஜம்தான். ஆனால், அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே, ஏணியைத் தேடி, அதன் மீது ஏறி நின்று சாகசம் செய்ய வேண்டுமே என்ற மலைப்பு பலருக்கும் வந்துவிடும். இனி அந்த கவலை வேண்டாம், தரையில் பாதுகாப்பாக நின்றபடியே உங்கள் சீலிங் ஃபேனை பளிச்சென்று மாற்ற சில எளிய வழிகள் இதோ.

ஃபேன் சுத்தம் செய்ய உதவும் சூப்பர் கருவிகள்

வீட்டிலிருக்கும் ஒரு பழைய தலையணை உறையே இதற்கு ஒரு சிறந்த கருவி. நீளமான துடைப்பம் அல்லது மாப் குச்சியின் முனையில் தலையணை உறையை மாட்டி, ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாக கட்டிவிடுங்கள். இப்போது இந்த அமைப்பைக் கொண்டு மின்விசிறியின் ஒவ்வொரு இறக்கையையும் துடைக்கும்போது, தூசி கீழே சிந்தாமல் அந்த உறைக்குள்ளேயே சேகரமாகிவிடும்.

இது தவிர, நீளத்தை தேவைக்கேற்ப சரிசெய்யக்கூடிய 'எக்ஸ்டெண்டபிள் டஸ்டர்' கடைகளில் கிடைக்கிறது. இதன் தலைப்பகுதியை வளைத்து, இறக்கைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியை எளிதாக சுத்தம் செய்யலாம். உங்கள் வீட்டில் நீளமான குழாய் இணைப்புடன் கூடிய வேக்யூம் கிளீனர் இருந்தால், அது இன்னும் சிறந்தது; காற்றில் தூசி பறக்காமல் அத்தனையையும் உறிஞ்சி எடுத்துவிடும்.

USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!

இதை கவனத்தில் கொள்ளுங்கள்

சமையலறைக்கு அருகில் இருக்கும் ஃபேனில் எண்ணெய் பிசுக்குடன் தூசி படிந்திருக்கும். இதை சுத்தம் செய்ய, சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் கலந்த கரைசலில் துணியை லேசாக நனைத்துத் துடைக்கலாம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் திரவத்தை நேரடியாக ஃபேன் மோட்டார் மீது தெளித்துவிடக் கூடாது என்பது மிக முக்கியம்.

சுத்தம் செய்வதற்கு முன்பு, மின்விசிறியின் கீழே ஒரு பழைய செய்தித்தாள் அல்லது பெட்ஷீட்டை விரித்துவிடுவது உங்கள் வேலையைக் குறைக்கும். அதேபோல், சுத்தம் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுத்து இறக்கைகளைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது இறக்கைகளை வளைத்து, ஃபேன் ஓடும்போது தேவையற்ற அதிர்வுகளையும் சத்தத்தையும் ஏற்படுத்திவிடும்.

Snakes : மனிதர்களை பாம்புகள் எப்படி காப்பாத்துது தெரியுமா? இது தெரிஞ்சா இனி பாம்புகளை அடிக்க மாட்டீங்க!

தூசி விரைவில் படியாமல் தடுக்க ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

எல்லாவற்றையும் விட முக்கியமான பாதுகாப்பு விஷயம், மின்சாரத் துண்டிப்பு. சுவிட்சை அணைப்பது மட்டுமல்லாமல், முடிந்தால் மெயின் பாக்ஸில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு வேலையைத் தொடங்குவது மிகவும் பாதுகாப்பானது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி சுத்தம் செய்தால், அதிக அழுக்கு சேராமல், உங்கள் வேலையும் எளிதாகிவிடும்.

ஃபேன் இறக்கைகளில் தூசி படிவதற்கு முக்கிய காரணம் நிலைமின்சாரம் ஆகும். ஃபேனின் இறக்கைகள் காற்றில் சுழலும் போது ஏற்படும் உராய்சலால் இந்த மின்சாரம் உருவாகி தூசியைக் கவர்கிறது. வினிகர் அல்லது சோப்பு நீரைப் பயன்படுத்தி ஃபேனைத் துடைத்து முடித்த பிறகு, ஒரு மெல்லிய துணியில் சில சொட்டுகள் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் அல்லது சிறிதளவு கார் வேக்ஸ் தடவி இறக்கைகளின் மேல் பகுதியில் ஒரு லேசான பூச்சாக துடையுங்கள். இது இறக்கைகளில் நிலைமின்சாரம் உருவாவதைக் குறைக்கும். இதனால் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு தூசி படியாமல் ஃபேன் பளிச்சென்று இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Africa Splitting: ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவுபடுகிறது: பூமியில் உருவாகும் உலகின் 6-வது பெருங்கடல்
Kalyana Veettu Samayal Recipes: 5 அசத்தலான கல்யாண வீட்டு உணவு வகைகள் ஈஸியா செய்யும் முறை