செல்லப்பிராணிகளை குளிர்காலத்துல 'எப்படி' பாராமரிக்கனும்? செலவில்லாத '5' டிப்ஸ்

Published : Dec 19, 2024, 12:59 PM ISTUpdated : Dec 19, 2024, 01:07 PM IST
செல்லப்பிராணிகளை குளிர்காலத்துல 'எப்படி' பாராமரிக்கனும்? செலவில்லாத '5' டிப்ஸ்

சுருக்கம்

Pets Care In Winter : குளிர்காலத்தில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

குளிர்காலம் வந்து விட்டதால் நம்மை நாம் கதகதப்பாக வைத்துக்கொள்ள இரண்டு மூன்று போர்வைகளை பயன்படுத்துவோம். இது தவிர, அவ்வப்போது சூடான டீ குடித்து உடம்பை இடமாக்கி கொள்வோம். ஆனால் இந்த குளிர்காலத்திலும் நாம் நம்முடைய வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளை கவனித்துக் கொள்வதை மறந்து விடுவோம். மேலும் குளிரில் அவை நடுங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளை முறையாக பராமரிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Heat Strokes In Dogs : நாய்களை தாக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்'... இப்படி கவனித்து கொள்ளுங்கள்!

குளிர்காலத்தில் செல்ல பிராணிகளை பராமரிக்கும் முறை:

1. குளிர்காலத்தில் செல்ல பிராணிகளை ஈரம் இல்லாத மற்றும் சூடான இடத்தில் தங்க வைக்கவும். அதுபோல அதிக வெப்பமான இடத்தில் வைத்தாலும் அவைகள் உடல் நலம் பாதிக்கப்படலாம். எனவே நல்ல காற்றோட்டமான சூரிய ஒளி படும் இடத்தில் செல்லப்பிராணிகளை வைக்கவும்.

2. குளிர்காலத்தில் செல்ல பிராணிகள் குறைவான உணவு எடுத்துக் கொண்டால் கலோரிகள் அதிகம் உள்ள உணவை அதிகம் கொடுங்கள். ஏனெனில் அவைகளுக்கு கலோரிகள் அதிகம் தேவைப்படும்.

3. அதுபோல செல்லப்பிராணிகளுக்கு குளிர்காலத்தில் குளிர்ச்சியான தண்ணீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை கொடுக்கவும்.

4. இந்த குளிர்காலத்தில் செல்லப்பிராணிகளை நீங்கள் வெளியே அழைத்துச் செல்ல விரும்பினால், அவைகளுக்கு சிறப்பு உடைகளை அணிவித்து அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் அழைத்துச் செல்ல வேண்டாம்.

5. செல்ல பிராணிகளின் சருமம் இந்த குளிர்காலத்தில் வறண்டு போயிருந்தால் அவைகளின் சருமத்தை ஈரமாக வைக்க அதற்கென க்ரீம்களை பயன்படுத்துங்கள்.

6. முக்கியமாக, செல்லப்பிராணகளை
இந்த குளிர்காலத்தில் அடிக்கடி குளிப்பாட்ட வேண்டாம். ஏனென்றால், அவற்றை அடிக்கடி குளிப்பாட்டும் போது அவற்றின் உடலில் இருக்கும் வெப்பம் குறைந்து செல்லப்பிராணகள்  உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கும்.

7. அதுபோல செல்லப்பிராணிகளை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் குளிரால் அவற்றின் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனே சரி செய்து அதற்கான சிகிச்சையை அழித்துவிடலாம்.

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 3 ராசிக்காரங்க தப்பி தவறி கூட பூனையை வளர்க்காதீர்கள் பெரிய நஷ்டம் ஏற்படும்..!!

குளிர்காலத்தில் செல்லபிராணிகளை பாதுகாத்துக்கொள்வது நம்முடைய கடமை.. அவற்றை முறையாக பராமரித்தால் அவைகளும் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு நீங்கள் மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றுங்கள். உங்கள் வீட்டு செல்லப்பிராணிகள் நலமுடன் இருக்கும்.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்