‘வந்தேண்டா பால்காரி’... வருஷத்துக்கு ரூ.2 கோடி சம்பாதிக்கும் பெண்!

By Manikanda Prabu  |  First Published Aug 16, 2023, 9:26 PM IST

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால்நடை வளர்ப்பு மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி வரை சம்பாதித்து உதாரணமாக திகழ்ந்து வருகிறார்


பொதுவாக மக்கள் ஓய்வு பெறும் வயதில், குஜராத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத பெண் ஒருவர், தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். அவரது பெயர் நவல்பென் டல்சங் பாய் சவுத்ரி (64). அண்ணாமலை திரைப்படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல, கால்நடை வளர்ப்பு மூலம் ஆண்டு ஒன்றுக்கு கோடிகளில் சம்பாதித்து வருகிறார் அவர்.

கொரோனா ஊரடங்கில் தனது தொழிலை ஆரம்பித்த நவல்பென் சவுத்ரி, முதல் ஆண்டிலேயே ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறுகிறார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த நவல்பென் சவுத்ரிக்கு 4 மகன்கள் உள்ளனர். எம்.ஏ., பி.எட் என பட்டப்படிப்பு, முதுகலை படித்திருக்கும் அவர்கள், அதே நகரத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் நால்வருமே அவ்வப்போது தங்களது தாய்க்கு உதவியும் புரிந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

நவல்பென் காலையில் எழுந்த உடனேயே தனது கால்நடைகளை பராமரிக்கத் தொடங்கி விடுகிறார். அவற்றை மிகவும் பாசத்துடன் கவனித்துக் கொள்ளும் அவர், அவைகளை வணிகப் பொருளாக மட்டுமே பார்ப்பதில்லை.

நவல்பென் தனது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில், பால் பொருட்கள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இன்று அவரிடம் 200 க்கும் மேற்பட்ட எருமைகள் மற்றும் 100 பசுக்கள் உள்ளன. 2020ஆம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். கால்நடை வளர்ப்பு தொழில் மூலம் 2020ஆல் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை அவர் சம்பாதித்துள்ளார்.

பெண்களின் கவனத்திற்கு; சமையலறையில் வாஸ்து தோஷம் இருந்தால் உங்கள் கணவரை ஏழையாக்கும்.....!!

இந்த தொழிலை நவல்பென் தொடங்கியபோது, அவருடைய மாமியார் வீட்டில் 8 முதல் 10 கால்நடைகள் இருந்துள்ளன. அவருக்கு பால் கறக்கும் எருமை மாடு ஒன்றை அவரது தந்தை அளித்துள்ளார். இதையடுத்து, படிப்படியாக அவரது வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில், மக்களின் பால் தேவைகளை அவர் பூர்த்தி செய்யத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுகளில், அவரது வணிகம் மேலும் விரிவடைந்து, ஆசியாவின் மிகப்பெரிய பனாஸ் பால் பண்ணைக்கு தனது கால்நடைகள் உற்பத்தி செய்யும் பாலை நவல்பென் விற்பனை செய்யத் தொடங்கினார். இந்த பால் பண்ணையில் தினமும் 1000 லிட்டர் பால் விற்பனை செய்வதன் மூலம் மட்டும் மாதந்தோறும் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை நவல்பென் சம்பாதிக்கிறார். பனாஸ் பால் பண்ணைக்கு அதிக பால் விற்பனை செய்ததற்காக அவரை அந்நிறுவனம் கவுரவித்துள்ளது.

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் நவல்பென், காலை 7:00 மணிக்கெல்லாம் பால் விற்பனைக்கு தயாராகி விடுகிறார். பால் பண்ணைகளில் பாலை நிரப்பியவுடன், மாலை நேரத்துக்கு பால் உற்பத்திக்க்கு தயாராகி விடுகிறார். இதனால், நாள் முழுவதும் தனது கால்நடைகளுடன் அவர் நேரத்தை செலவழிக்கிறார். நவல்பென் தனது 5 ஏக்கர் நிலத்தில் அவரே கால்நடைகளுக்கான தீவனத்தை பயிரிடுகிறார். அத்துடன், 30 பேருக்கு வேலைவாய்ப்பையும் அவர் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

ஆகஸ்ட் 2020 இல், அமுல் டெய்ரி தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சோதி, நாட்டின் 10 கோடீஸ்வர கிராமப்புற பெண் தொழில்முனைவோர் பட்டியலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த ஆண்டில் 22,15,956 லட்சம் கிலோ பாலை விற்பனை செய்து, ரூ.85 லட்சத்துக்கும் மேலாக சம்பாதித்து அதிக வருமானம் ஈட்டிய பெண்களின் அந்த பட்டியலில் நவல்பெண் இடம் பிடித்தார். மேலும், 2020 ஆம் ஆண்டில், குஜராத்  மாநிலம் காந்திநகரில் நவல்பெனுக்கு விருது வழங்கி அம்மாநில முதல்வர் கவுரவித்தார். அவரது பனஸ்கந்தா மாவட்டம் மூன்று கால்நடை வளர்ப்பு விருதுகளுடன், இரண்டு லட்சுமி விருதுகளையும் அந்த ஆண்டில் பெற்றது.

click me!