தமிழகத்திற்கு வந்த எகிப்து வெங்காயம் எப்படி இருக்கும்..? ஆர்வம் காட்டாத மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 10, 2019, 6:09 PM IST
Highlights

அளவுக்கு மீறிய அளவில் பெரிதாக இருப்பதால்,  எகிப்து வெங்காயம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எகிப்து துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து உள்ளது மத்திய அரசு. எகிப்தில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் இந்தியாவில் விளையும் வெங்காயத்தை போன்று இல்லாமல் காரம் குறைவாகவும், கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும்.

எகிப்தில் விளையும் ஒரு வெங்காயமே 200 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். இந்த வெங்காயத்தை, இந்திய வெங்காயம் போல, நீண்ட நாட்கள் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாது. பத்து முதல் 15 நாட்கள் வரை மட்டுமே இந்த வெங்காயம், தாக்குபிடிக்கும். அதற்கு மேல் வைத்திருந்தால் அழுகிவிட அதிக வாய்ப்புள்ளது. எகிப்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.            

எகிப்து வெங்காயம் ருசி இல்லாததால் ரூ.70 ஆக விலை குறைந்தும் விற்பனை படுமந்தமாக காணப்படுகிறது. அளவுக்கு மீறிய அளவில் பெரிதாக இருப்பதால்,  எகிப்து வெங்காயம் வாங்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அளவுக்கு மீறிய அளவில் பெரிதாக இருப்பதால்,  எகிப்து வெங்காயம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.             

click me!