Astrology Today : குடும்பத்தில் பிரச்சனையான நாள்.. சிம்மம், துலாம் ராசிக்காரர்களே எச்சரிக்கை...

Published : Feb 05, 2022, 05:16 AM IST
Astrology Today : குடும்பத்தில் பிரச்சனையான நாள்.. சிம்மம், துலாம் ராசிக்காரர்களே எச்சரிக்கை...

சுருக்கம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று சந்திராஷ்டமம்.. வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள்..

05-02-22 - சனிக்கிழமை

தை - 23

ராசி பலன்கள்

மேஷம் :

மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். இன்பமான நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️அஸ்வினி : அனுகூலமான நாள்.

⭐️பரணி : முதலீடுகள் அதிகரிக்கும்.

⭐️கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

ரிஷபம் :

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வரவு மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

 

⭐️கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.

⭐️ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.

⭐️மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.

மிதுனம் :

தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️மிருகசீரிஷம் : தனவரவுகள் கிடைக்கும்.

⭐️திருவாதிரை : இன்னல்கள் குறையும்.

⭐️புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

 கடகம் :

வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

 

⭐️புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐️பூசம் : புரிதல் உண்டாகும்.

⭐️ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியம் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️மகம் : அனுசரித்து செல்லவும்.

⭐️பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️உத்திரம் : புதுமையான நாள்.

கன்னி :

கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சிறு சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

 

⭐️உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

⭐️அஸ்தம் : ஆதரவான நாள்.

⭐️சித்திரை : அனுபவம் உண்டாகும்.

 துலாம் :

பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். தன்னம்பிக்கையான நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐️சுவாதி : அனுபவம் ஏற்படும்.

⭐️விசாகம் : லாபம் மேம்படும்.

விருச்சிகம் :

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

 

⭐️விசாகம் : புரிதல் மேம்படும்.

⭐️அனுஷம் : நம்பிக்கை ஏற்படும்.

⭐️கேட்டை : சாதகமான நாள்.

தனுசு :

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

 

⭐️மூலம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️உத்திராடம் : நன்மைகள் உண்டாகும்.

மகரம் :

நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. அமைதி நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

 

⭐️உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

⭐️திருவோணம் : போட்டிகள் குறையும்.

⭐️அவிட்டம் : விவேகம் வேண்டும்.

கும்பம் :

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் தோன்றிய பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர்வான நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

⭐️அவிட்டம் : விருப்பம் நிறைவேறும்.

⭐️சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.

மீனம் :

பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். நன்மையான நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5.

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

 

⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

⭐️உத்திரட்டாதி : வரவு மேம்படும்.

⭐️ரேவதி : அனுபவங்கள் பிறக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்