Today astrology: இன்று குரு உதயத்தால்...மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் 5 ராசிகள்..இன்றைய ராசி பலன்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 26, 2022, 05:55 AM IST
Today astrology: இன்று குரு உதயத்தால்...மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் 5 ராசிகள்..இன்றைய ராசி பலன்..!

சுருக்கம்

Today astrology: இன்று குரு உதயமாவதால், எந்தெந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

இன்று குரு உதயமாவதால், எந்தெந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம். ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம் சிலருக்கு சோகத்தை தரும் சிலருக்கு, மகிழ்ச்சியை கொடுக்கும். அவை எந்ததெந்த ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஒன்பது கிரகங்களில் தேவகுரு வியாழன் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மங்களத்தின் கிரகமான தேவகுரு வியாழன் அமைப்பு, ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்க செய்யும். ஜோதிடத்தின் படி, குரு பகவான் இன்று (மார்ச் 26) உதயமாகிறார். அதன்படி, கும்ப ராசியில், வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.30 மணிக்கு நடைபெறும். இவை எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பலன் தரும் என்பதை இந்த பதிவின் மூலம்  தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் சுபமாக இருக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இந்த காலத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவுகள் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். 

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் எட்டாவது மற்றும் பதினொன்றாவது ஸ்தானத்தின் ஏற்படுவதால், தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம்.

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  குரு உங்கள் ஏழாவது வீட்டில் உதயமாகிறார். குருவின் உதயத்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிம்ம ராசிக்கார்ரகள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வர்த்தகர்கள் பெரிய ஆர்டர்கள் அல்லது லாபம் பெறலாம். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு இந்த காலத்தில் அதிகமாக கிடைக்கும். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் வியாழன் உதயம் ஐந்தாம் வீட்டில் நடக்கிறது. இன்று முதல் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையான காலம் தொடங்கும். அனைத்திலும் வெற்றி பெறுவார். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மக்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் இரண்டாம் வீட்டில் நடக்கப்போகிறது. இது மகர ராசிக்காரர்களுக்கு, செல்வத்தைத் அள்ளி தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் பல வழிகளில் பணத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். லாபம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

 மேலும் படிக்க....Today astrology: சூரியப் பெயர்ச்சி பலன்கள்...இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை...இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க